குத்தாலத்தில் டிப்டாப் உடையுடன் கடந்த மாதம் குடையை கொண்டு முகத்தை மறைத்தவாறு குடியிருப்பு வளாகத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் அதே குடியிருப்பில் வசித்து வந்த நபர் பைக்கை திருடி சென்றது தெரியவந்ததை தொடர்ந்து குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


குடியிருப்பு வளாகத்தில் திருட்டு 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வியாபாரி செட்டி தெருவில் அன்பு என்ற பெயரில் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அங்கு இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி அதிகாலை டிப்டாப் உடையுடன் குடையால் முகத்தை மறைத்தவாறு நூதன முறையில் குடியிருப்பு வளாகத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஜூபிடர் இரு சக்கர வாகனத்தை சாதுரியமாக தள்ளி சென்று திருடி சென்றுள்ளார். 


T20 World Cup: நமீபியாவை அடித்து துவைத்து சூப்பர் 8 சுற்றுக்கு சென்ற ஆஸ்திரேலியா - வெளியேறிய இலங்கை?




சிசிடிவி பதிவு


இதுதொடர்பாக குடியிருப்பில் வசிக்கக்கூடிய வாகனத்தின் உரிமையாளர் சுந்தரம் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குத்தாலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


Rahul Gandhi In Kerala : "நான் சின்ன பையனா இருக்கும்போது" கேரளாவில் குட்டி கதை சொன்ன ராகுல் காந்தி!




குற்றவாளி கைது


சேத்திரபாலபுரம் ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட்டும் தகவல் வெளியாகியது. இருசக்கர வாகனம் திருடப்பட்ட அதே குடியிருப்பில் தான் குற்றவாளி வசித்துவருபது தெரிந்துயவந்தது. மேலும் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் குற்றவாளி சென்னையை சேர்ந்த 46 வயதான முத்து என்பதும், பெயிண்டர் வேலை செய்யும் இவர் , காரைக்காலில் உள்ள பெண்ணை திருமணம் செய்து, குத்தாலத்தில் உள்ள அன்பு காம்ப்ளக்ஸில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.


Vikravandi by election: முதன் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறதா பாமக? - வன்னியர் வாக்குகள் நிறைந்த விக்கிரவாண்டி




ஒரு வாரமாக குடியிருப்பு வளாகத்தை நோட்டமிட்டு வந்த முத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நாள் முதல் மாயமாகியுள்ளார். அண்ணனுக்கு இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 30 ஆயிரம் பணம் பெற்று இருசக்கர வாகனத்தை திருடி அண்ணனுக்கு கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.