T20 World Cup: நேபாள அணிக்கு எதிரான லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், இலங்கை அணி போட்டியிலிருந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.


ஐசிசி டி-20 உலகக் கோப்பை:


ஐசிசி ட்-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று காலை நடைபெற்ற லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் நமிபியா அணிகள் மோதின.


நமீபியாவை சுருட்டிய ஆஸ்திரேலியா: 


ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபிய அணி 17 ஓவர்களில் 72 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிபட்சமாக எராஸ்மஸ் 36 ரன்களை சேர்க்க, லிங்கென் 10 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆஸ்திரேலிய சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.


சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த ஆஸ்திரேலிய:


தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், வார்னர் 8 பந்துகளில் 20 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 34 ரன்களும், மிட்செல் மார்ஷ் 18 ரன்களும் சேர்க்க, 5.4 ஓவர்களிலேயே 74 ரன்களை விளாசி ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லீக் சுற்றில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்குள் முன்னேறியுள்ளது. பி பிரிவில் ஸ்காட்லாந்து அணி 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 2 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதனால், அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதே சந்தேகமாக உள்ளது.


இலங்கை அணி வெளியேற்றம்?


முன்னதாக நேற்று இரவு புளோர்டாவில் நடபெற்ற மற்றொரு லீக் போட்டியில், டி பிரிவைச் சேர்ந்த இலங்கை மற்றும் நேபாள அணிகள் மோத இருந்தன. ஆனால், மழை காரணமாக டாஸ் கூட போடாமல் போட்டி வைகிடப்பட்டது. இதுவரை 3 இலங்கை அணியின் 3 போட்டிகள் நிறைவடந்துள்ள நிலையில், இரண்டு தோல்விகள் மற்றும் ஒரு போட்டி டிரா என வெறும் 1 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும், சூப்பர் 8 சுற்றுக்குள் செல்ல இலங்கை அணிக்கு மிக மெல்லிய வாய்ப்பே உள்ளது. இதனால், இலங்கை அணி டி20 உலக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.