சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தில் மளிகை கடை உரிமையாளர் கடை வாசலில் கழுத்து அறுத்து கொலை செய்யபட்டுள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்டிக்கடை உரிமையாளர் கொலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான முகமது ரபிக். இவர் அதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதியதாக மளிகை கடை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடை வாசல் முன்பு முகமது ரபிக் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
தகவலை அடுத்து சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது ரபீகின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முகமது ரஃபீக்கிற்கு அபுரோஜா கனி என்ற மனைவியும், இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
சிசிடிவி காட்சிகள்
மனைவி, மகன், மகள் ஆகியோருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பெட்டிக்கடையில் வசித்து வருவதாக விசாரணையில் தெரிய வருகிறது. தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தார். மேலும் காவல்துறையினர் கடையில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Shocking Video: மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றொரு சம்பவம்
இந்நிலையில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்த்தில் உள்ள மெயின் ரோட்டில் வசித்து வரும் 64 வயதான பஜில் முகமது மற்றும் அவரது மனைவி மர்ஜானாபேகம் இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் முதல் மகன் மகதீர், திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது மகன் அகமது பாரீஸ் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். மேலும், மூன்றாவது மகன் முகமது அஜ்மல் சென்னையில் உயர்கல்வி பயின்று வருகிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் : லாபத்துக்காக செயல்படுத்த நினைக்கிறது பாஜக.. எம்.பி., கனிமொழி குற்றச்சாட்டு..
இந்த சூழலில் நேற்று முன்தினம் பஜில் முகமது வெளியூர் சென்று விட்டு வீடு திறும்பி போது அவரது மனைவி மர்ஜானாபேகம் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீட்டின் சோஃபாவில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பொறையார் காவல்துறை நிலைத்திற்கு தகவல் அளிக்க அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து அடுத்து மயிலாடுதுறையில் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த இரண்டு கொலை சம்பவத்தால் மாவட்டத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.