இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இரண்டு நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,359.52 அல்லது 1.63% புள்ளிகள் உயர்ந்து 84,544.31 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 375.15 அல்லது 1.48% புள்ளிகள் உயர்ந்து 25,790.95 ஆக வர்த்தகமாகியது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்பட்டது.


வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 84 ஆயிரம் புள்ளிகளுடன் வர்த்தகமானது. 2,196 பங்குகள் ஏற்றத்துடனும் 1,071 பங்குகள் சரிவுடனும் 105 பங்குகள் மாற்றமின்றியும் இருந்தன. 


இந்திய பங்குச்சந்தை ஏற்றத்திற்கு காரணம் என்ன?


அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 50 பேசிசிஸ் பாயிண்ட்ஸ் அளவு குறைத்தது. ஆசிய பசிஃபிக் சந்தைகள் ஏற்றம் கண்டன. ஜப்பான் Nikkei 225 ஆக உயர்ந்தது. ஜப்பாம் கன்ஸ்யூமர் ப்ரைஸ் இண்டெக்ஸ்ம் 2.8 சதவீதமாக உயர்ந்தது. அதோடு, ஜப்பான் பாலிசி மீட்டிங்க் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. அமெரிக்க வட்டி விகிதம் குறைப்பு இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பிற்கு உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


நிஃப்டி வங்கி இன்டெக்ஸ் தொடர்ந்து ஏழாவது செசனாக உயர்ந்துள்ளது. 53,357 ஆக உயர்ந்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி., கோடாக் மஹிந்திரா வங்கி ஆகியவை 1-2%  உயர்ந்துள்ளது. 


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:


எம்&எம், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஜெ.எஸ்.டபுள்யு., லார்சன், பாரதி ஏர்டெல், கோல் இந்தியா, நெஸ்லே, ஹெ.யு.எல்., அதானி எண்டர்பிரைசிஸ், அதானி போர்ட்ஸ், மாருதி சுசூகி, ஈச்சர் மோட்டர்ஸ், பவர்கிரிட் கார்ப், ஹெச்.டி.எஃப்.சி., வங்கி,கோடாக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டாடா ஸ்டீல்,ஹிண்டால்கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெ.சி.எல்., டெக்., பிரிட்டானியா, ஐ.டி.சி., ரிலையன்ஸ், விப்ரோ, சன் ஃபார்மா, அப்பல்லோ மருத்துவமனை, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், பஜாஜ் ஆட்டோ,இன்ஃபோசிஸ், டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டர்ஸ்,ஓ.என்.ஜி.சி., ஆக்ஸிஸ் வங்கி, டாடா கான்ஸ் ப்ராட், ஹீரோ மோட்டர்கார்ப், சிப்ளா ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 


கிரேசியம், எஸ்.பி.ஐ., இந்தஸ்லேண்ட் வங்கிம், பஜாஜ் ஃபினான்ஸ், எல்.டி.ஐ. மைண்ட் ட்ரீ அகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.