மயிலாடுதுறை அருகே மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 900 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தும், இந்த மது விற்பனையை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது.
இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மாநில மது விற்பனை என்பது தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது பானங்கள் விற்பனையை கண்டுகொள்வதும் இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் பகுதியில் சாராயம் கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் விசித்ரா மேரி தலைமையில் அப்பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த சொகுசு காரினை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த சொகுசு காரில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
Rajinikanth: ரஜினிகாந்தின் பக்கத்து வீட்டுப் பெண்மணி ஆவேசம்.. ரசிகர்களால் பெரும் தொல்லை என வேதனை!
அதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் மதுபானம் கடத்த பயன்படுத்திய காரினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து 2500 சாராய பாட்டில்கள் மற்றும் 2250 பாண்டி ஐஸ் பாக்கெட்டுகள் என 900 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரினை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரினை ஓட்டி வந்த பெரம்பூர் அருகே கொடைவிளாகம் பகுதியை சேர்ந்த குற்றவாளி ரமேஷை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Crime: பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை! சாகும் வரை சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் இதுபோன்று புதுச்சேரி மதுபானங்கள் அதிகளவில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்டு, விற்பனை நடைபெறுவது வாடிக்கையான ஒன்று, காவல்துறையினர் இந்த ஒருவரை கண்டுபிடித்து பிடித்துள்ளது பாராட்டுக்குரியதுதான் , இருந்த போதிலும் இதுபோன்று ஏராளமானோர் காரைக்காலில் இருந்து மது கடத்தி வந்து பொங்கல் பண்டிகையை பயன்படுத்தி விற்பனையில் ஈடுபடுவதையும், கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Crime: 15 ரூபாய் கடனுக்காக ஒருவர் அடித்துக் கொலை; ஆம்பூர் அருகே பயங்கரம்