பொங்கல் பண்டிகையான இன்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை, போயஸ் இல்லத்தில் உள்ள தன் வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு இன்று காலை வாழ்த்து தெரிவித்தார்.


ரஜினி வீட்டு முன் படையெடுத்த ரசிகர்கள்


ஒவ்வொரு பண்டிகையின் போதும் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டு முன் அவரது ரசிகர்கள் குவிந்து ரஜினிகாந்தை வாழ்த்தியும் அவரிடம் வாழ்த்துகளைப் பெற்றும் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் விழாவான இன்று அதிகாலை ரஜினிகாந்தின் தரிசனம் ரசிகர்கள் அவரது வீட்டு முன் படையெடித்தனர். அப்போது தன் பூட்டப்பட்ட இல்லத்தில் இருந்த் கேட்டுக்கு உள்ளே இருந்தபடி தன் வழக்கமான ஸ்டைலில் இருகரம் தூக்கி ரசிகர்கள் ஆர்ப்பரிக்க ரஜினிகாந்த் அவர்களுக்கு கையசைத்தார்.


இதனைத் தொடர்ந்து தன் வீட்டுக்கு வெளியே வந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்,  தன் பொங்கல் வாழ்த்தினை அவர்களுக்குத் தெரிவித்தார். “அனைவரும் மன நிம்மதியுடன் நெகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்” என வாழ்த்தி தன் ரசிகர்களிடமிருந்து விடைபெற்றார். 


 “தலைவா, இறைவானு வந்துடறாங்க”


இந்நிலையில், ரஜினிகாந்தின் ரசிகர்கள் இப்படி பண்டிகை மற்றும் முக்கிய தினங்களில் வீட்டின் முன் கூட்டம் கூடி கத்துவதும், ஆர்ப்பரிப்பதும் தங்களுக்கு பெரும் கஷ்டமாகவும் வேதனையாகவும் இருப்பதாக, ரஜினிகாந்த் வீட்டின் பக்கத்து வீட்டுப் பெண்மணி பொங்கி எழுந்துள்ளார்.


இன்று காலை தங்கள் வீட்டின் முன்பாகவும் கும்பல் கூடியதால் கோபமடைந்த ரஜினியின் பக்கத்து வீட்டுப் பெண்மணி ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் ரஜினிகாந்த் வீட்டு பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  “தலைவா, இறைவானு வருவாங்க..  எங்கள மாதிரி ஒருத்தரும் இங்க கஷ்டப்பட மாட்டாங்க.. பாக்க வரவங்களுக்கு கேட்ட திறந்து உள்ள விடுங்க.. உங்க கேட்ட (ரஜினிகாந்த் வீட்டு கேட்) திறக்க மாட்டீங்க.. எங்க வாசல மூடி இப்படி வைக்கணும். என்ன நான்சென்ஸ் இது?


“உங்க கேட்ட திறங்க”


உங்க வாசல திறந்து எல்லாரையும் உள்ள விடுங்க.. தலைவர் வீட்ட பார்க்கட்டும். அன்னைக்கு அந்த அம்மா ராத்திரி 10 மணிக்கு ப்ரெஸ் கான்ஃபரன்ஸ் கொடுத்தாங்க இல்ல? நாங்களும் டேக்ஸ் கட்டறோம்..  ஆனா எங்களுக்கு ஒரு அட்வாண்டேஜூம் இல்ல. போதாத குறைக்கு பண்டிகை அன்று விடியற்காலைல இந்த மாதிரி கூட்டம் வந்து இப்படி பண்றீங்க. சாமி கும்பிடமுடியாது, ஒன்னும் பண்ண முடியாது. நாங்க சலிப்படைந்து விட்டோம்” என மனவேதனை மற்றும் கோபத்துடன் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.


இந்நிலையில் ரஜினி இனி தன் ரசிகர்களை ராகேவந்திரா மண்டபத்தில் இருந்து சந்திக்க  வேண்டும் என்றும், பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்றும் இணையவாசிகள் பகிர்ந்து வருகிறார்கள்.


மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!