மயிலாடுதுறை அருகே 13 வயது பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 90 வயதான முதியவரை போக்சோ வழக்கில் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
சிறுமியை உதவிக்கு அழைத்த முதியவர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முத்தூர் வடுகவிருட்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் 90 வயதான நாராயணசாமி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரை தனது கண்ணுக்கு மருந்து போட வேண்டும் என அழைத்துள்ளார். அங்கு சென்ற அந்த சிறுமி கண் மருந்தை வாங்கி நாராயணசாமியின் கண்ணில் மருந்து போட்டுள்ளார்.
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
கூச்சலிட்ட சிறுமி
அப்போது நாராயணசாமி சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அச்சமடைந்து கூச்சலிட்டுள்ளார். கூச்சல் சத்தம் கேட்டு சிறுமியின் உறவினர் பெண் ஒருவர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளார். உடனே சிறுமியை மீட்ட அந்தப் பெண், முதியவரர் நாராயணசாமியை திட்டி விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
போக்சோ வழக்கு பதிவு
இதனை அறிந்த அந்ந சிறுமியின் தாயார் இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுகந்தி மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், முதியவர் நாராயணசாமியை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நாராயணசாமியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கண்ணுக்கு மருந்து போட வேண்டும் என அழைத்து அதும் 90 வயது முதியவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
தெரிந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தல்
குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், சிறு பிள்ளைகளுக்கு திருமண ஆசை ஏற்படுத்துவதும் என துன்புறுத்தல்களும் செய்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அளிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரையும் கூற முடியாத நிலையில், ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும், இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.