2024-ம் ஆண்டில் சமூக வலைதளங்கள் உள்பட செய்திகளில் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள், புகைப்படங்கள் பற்றி விரிவாக காணலாம். 

வெற்றி கொண்டாட்டாம் முதல் போராட்டம் வரையிலான வைரலான புகைப்படங்களின் தொகுப்பு இது. 

விராட் கோலி - ரோகித் ஷர்மா - உலகக் கோப்பை டி-20 வெற்றி 

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்த புகைப்படம் விராட் கோலி - ரோகித் ஷர்மா இருவரும் வெற்றி கொண்டாட்டத்தில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீரை பதிவு செய்யும் புகைப்படம். 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி. கோப்பையை வெற்றி பெற்றுவிட்ட பெருமிதத்துடன் இருவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் மறக்க முடியாததாக இருக்கும்.  

2024 நாடாளுமன்ற தேர்தல் - நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஓரே விமானத்தில் பயணம்:

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் இருவரும் பாட்னாவில் இருந்து புது டெல்லிக்கு ஒரே விமானத்தில் பயணம் செய்தது பேசுப்பொருளானது. திட்டமிடமாம் நடந்த இந்த நிகழ்வு செய்திகளில் முக்கியத்துவம் பெற்றது.  தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA-allied JD(U)) உள்ள ஜனதா தல் கட்சியின் மூத்த தலைவர் நிதிஷ் குமார், I.N.D.I.A. கூட்டணியில் உள்ள RJD கட்சியின் தேஜஸ்வி யாதவ் இருவரும் ஓரே விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் கவனத்தை ஈர்த்தது. 

பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி புது வரலாறு படைத்தவர் வினேஷ் போகத். துரதிஷ்டவசமாக அதிக எடை காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இது இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் 50 கிலோவை காட்டிலும் 100 கிராம் எடை அதிகளவில் இருப்பதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் ஒட்டுமொத்த இந்தியாவும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தது. பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 

திருமணத்தில் Ludo கேம் விளையாடிய மணமகன்:

திருமணத்தில் மணமகன் ஸ்மாட்ஃபோனில் LUDO விளையாடியது சமூக வலைதளத்தில் வைரலானது. திருமண நிகழ்வுகள் நடந்தபோது அவர் வீடியோ கேம் விளையாடியது 4,68,500  பார்வையாளர்களை பெற்றது. 

பாலிவுட் சூப்பர்ஸ்டார்ஸ் ஷாருக் கான், சல்மான் கான் இருவரும் ’Karan Arjun' திரைப்படம் சேர்ந்து பார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டது. அவர்களின் நட்பு பற்றி பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்தனர். இருவரும் சேர்ந்து இணைந்த நடித்த கரண் அர்ஜூன் திரைப்படம் 1995ம் ஆண்டில் வெளியானது. 

சிரஞ்சீவி - பவன் கல்யாண் - தேர்தல் வெற்றி

2024-ல் ஆந்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் பவன் கல்யாண் அவரது அண்ணன் சீரஞ்சீவி வீட்டில் பெரும் வரவேற்பை பெற்றார். இது சமூக வலைதளத்தில் வைரலானது. 

பாரா ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற நவதீப் சிங்:

2024-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நவதீப் சிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது, அவருக்கு நீலநிற கேப் அளித்தது கவனம் ஈர்த்தது. 

உலக செஸ் சாம்பியன்ஷிப்:

இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் டிங் லிரனுக்கு எதிராகப் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இன்று (12.12.2024) நடந்த 14வது போட்டியில் குகேஷ் வெற்றி பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.  விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இரண்டாவது நபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது.