மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் என்பவரின் மகன் 40 வயதான கலைவாணன். இவர்மீது 4 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான இவர் கடந்த 13 -ம் தேதி இரவு 8.30 மணியளவில் அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. 





நாட்டுவெடிகுண்டு வெடித்ததில் கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள 10 விரல்களும் துண்டானது. மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கலைவாணன் மேல் சிகிச்சைக்காக தற்போது  தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு வெடித்த வீட்டை காவல்துறையினர் சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் . தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் நடத்திய சோதனையில் வெடிக்காத 2 வெடிகுண்டுகள் மற்றும் குண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், வெடி மருந்துகள் ஆகியவை வீட்டின் உட்புறம் மற்றும் கொல்லைப்புறத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.


SC on Divorce: காதல் திருமண தம்பதிகளே அதிகளவில் விவாகரத்து பெறுகின்றனர் - உச்சநீதிமன்றம் வேதனை




 


கைப்பற்றப்பட்ட 2 வெடிகுண்டுகளை தண்ணீரில் போட்டு வைத்து பின்னர் திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நாட்டு வெடிகுண்டை செயலிழக்க செய்தனர். இது தொடர்பாக பெரம்பூர் காவல்  துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தஞ்சை தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் காயத்ரி தலைமையில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் வெடி மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து அதனை மேல் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட மூலப் பொருட்களுடன் ஆட்களை கொல்லும் வகையில் உள்ளே பால்ரஸ் குண்டுகள், இரும்பு ஆணிகள் ஆகியவை வைப்பதற்கான மூலப் பொருட்களும் இருந்தது கண்டறியப்பட்டது.




தமிழ்நாட்டில் ஏதேனும் குற்றச்சம்பவம் நிகழ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கைப்பற்ப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய திருச்சியில் இருந்து இன்று காவல் ஆய்வாளர் எட்வர்டு தலைமையில் 4 வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்க வைக்கும் துறை நிபுணர்கள் வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டின் முன்பு தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியன கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. பின்னர் வீட்டின் உட்புறம் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனர்.


Sitaram Yechury: எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் சிவப்பு கொடியேற வேண்டும் - சீதாராம் யெச்சூரி




இதில், புதிதாக வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, ஏற்கெனவே, கைப்பற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த 2 வெடிகுண்டுகளை பாம் ஸ்குவார்டுகள் ஆள்நடமாட்டம் இல்லாத வயல்வெளிக்கு கொண்டு சென்று செயலிழக்க வைத்தனர். மேலும், வெடிகுண்டு தயாரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகளை வெடிக்க வைத்து அழித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Kerala Crime Files: எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் ‘கேரளா க்ரைம் ஃபைல்ஸ்’ வெப் சீரிஸ் டீசர்.. ரசிகர்கள் வரவேற்பு