தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டம், சிந்தபல்லி மண்டலத்திற்குட்பட்ட கொல்லபள்ளி கிராமத்தில் உள்ள மகாகாளி கோயிலில், சிலையின் காலடியில் ஒரு மனிதனின் தலை கண்டெடுக்கப்பட்டது. 


இந்தச் சம்பவத்தை அடுத்து அந்த தலைக்குரிய நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த காவல் துறை 8 தனிப்படைகளை அமைத்தது. காளி தேவியின் சிலையின் காலடியில் தலை வைக்கப்பட்டுள்ள விதம் நரபலி நடந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊள்ளூர்வாசிகளும் அதையே உறுதிப்படுத்தும் விதமாக கூறுகின்றனர்.


இறந்தவரின் அடையாளத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த இடத்தில் வேறு யாராவது இறந்திருக்கிறார்களா என்பதிலும் காவல் துறையினர் கவனம் செலுத்திவருகின்றனர்.


தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் தலைக்குரிய நபருக்கு 30-35 வயது இருக்கும். இந்த சம்பவத்தை விசாரித்த தேவரகொண்டா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ரெட்டி, 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் வேறு எங்கோ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம், என்கின்றார். அவரது தலையை அங்கிருந்து இங்கு கொண்டு வந்து சிலையின் காலடியில் வைத்திருக்கலாம். இருப்பினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் சொல்வதாக தெரியவருகிறது


அந்த நபரின் உடலை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிலையின் காலடியில் துண்டிக்கப்பட்ட தலையின் திகிலூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 


காவல் துறையும் அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இதற்கிடையில், அருகிலுள்ள சூர்யாபேட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பம் காவல்துறையைத் தொடர்புகொண்டு, அந்த ஆணின் முக அம்சங்கள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய 30 வயது மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் ஒத்துப்போவதாக கூறினர். எனவே அதுகுறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Govt Holiday Jan 17: ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை.. ஏன் தெரியுமா? தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து முழு விவரம் இதோ..


தூத்துக்குடி துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்ட 10 கோடி மதிப்பிலான செம்மரம் பறிமுதல்


லோன் கொடுக்காத கனரா பேங்க்! பெட்ரோலை ஊற்றி கொளுத்திய கோபக்கார வாடிக்கையாளர்!