Crime : அலுவலகத்தில் ஏற்பட்ட சண்டையால் ஊழியர் ஒருவரை சக ஊழியர் துப்பாக்கியால் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹரியானா மாநிலம் குருகிராமில் ஐடி கம்பெணி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அமன் ஜங்ரா (24) மற்றும் விஷால் சிங் (23) என்பவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் வேளைக்கு சேர்ந்து 6 மாதங்கள் ஆன நிலையில், இருவருக்கு நீண்ட நாட்களாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இருவருக்கும் அலுவகத்திலேயே சண்டை நீடித்து வந்த நிலையில், நிறுவனம் இதுபோன்று அலுவலகத்தில் செயல்படக் கூடாது என்று பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் அவர்கள் அதை கேட்காமல் இருவரும் அலுவகத்திலேயே சண்டையிட்டு வந்தனர். 


இந்நிலையில், கடந்த புதன்கிழமை வழக்கம் போல் அமன் ஜங்ரா மற்றும் விஷால் சிங் ஆகியோர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அமன் ஜங்ரா அமரும் நாற்காலியில் விஷால் சிங் அமர்ந்திருந்தார். அதனை பார்த்த அமன் ஜங்ரா, இது பற்றி அவரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இருவருக்கு வாக்குவாதம் நீடித்த நிலையில், அவர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றனர். 


அப்போது இருவரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, விஷால் சிங்கை, தான் வைத்திருந்த துப்பாக்கியால் மார்பில் சுட்டார் அமன் ஜங்ரா. உடனே அமன் ஜங்ரா அந்த இடத்தில் இருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த விஷால் சிங்கை அருகில் இருப்பவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி விஷால் சிங் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபற்றி போலீசார் கூறுகையில், ”அலுவகத்தில் ஏற்பட்ட சண்டையால் ஊழியரை சக ஊழியர் சுட்டார். சக ஊழியரை சுட்ட அமன் ஜங்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அமன் ஜங்ராவை தேடி வருகிறோம்.  மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” போலீசார் தெரிவித்தனர்.




மேலும் படிக்க


தந்தையே மகள்களை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்: பஞ்சாப்பில் அதிர்ச்சி


Indore Temple Tragedy: இந்தூர் கோயில் விபத்து; பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு - ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்..! சோகத்தில் மக்கள்