மும்பை நகரின் மிரா-பாஹாயந்தார் பகுதி சைபர் க்ரைம் காவல்துறைக்கு கடந்த 27ஆம் தேதி ஒரு புகார் ஒன்று வந்துள்ளது. அந்தப் புகாரை ஒரு 52 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் தந்துள்ளார். அவர் கொடுத்த புகார் தான் மிகவும் பேசுப் பொருளாக மாறியுள்ளது. அப்படி அவர் கொடுத்த புகார் என்ன?
அதாவது அந்த நபர் காவல்துறைக்கு அளித்த புகாரில், “கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் இணையதளத்தில் ஒரு தளத்தில் இருந்தப் போது ஒரு ஆபாச விளம்பரம் வந்தது. அதை நான் கிளிக் செய்து பார்த்த போது அது என்னை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது. அதில் ஒரு ஜோடி ஆபாசமாக இருக்கும் வகையில் வீடியோ ஒன்று வந்தது. அந்த வீடியோவை மேலும் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று வந்தது. அந்த ஜோடியை நான் எங்களுடைய பகுதியில் பார்த்தது போல் இருந்தது.
இதனால் என்னுடைய நண்பரின் உதவியுடன் அந்த தளத்திற்கு பணம் செலுத்தி ஒரு பயனாளர் கணக்கு பெற்றேன். அதன்மூலம் அந்த தளத்தில் நான் சென்று பார்த்தப் போது அந்த ஜோடி நேரலையில் உடலுறவு வைத்து கொள்ளும் வீடியோ வந்தது. மேலும் அதை பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் வகையில் அவர்கள் ஆபாச செயலில் ஈடுபடுவதும் நடந்தது. அந்த வீடியோவில் இருப்பவர்கள் எங்களுடைய பகுதியில் உள்ளவர்கள் தான் என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. இதைத் தொடர்ந்து தற்போது நான் அவர்கள் மீது புகார் அளித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
இவரின் புகாரை அடுத்து காவல்துறையினர் ஐபிசி பிரிவு 292 மற்றும் 293 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67 மற்றும் 68 ஆகியவற்றின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஜோடி இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்த விவகாரம் ஒரு தனி தளத்தில் அதிலும் குறிப்பாக பணம் செலுத்தி பார்க்கும் வகையில் உள்ளது என்பதால் இதற்கு கைது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் இதுபோன்று பணம் செலுத்தி ஆபாச படங்களை பார்க்கும் தளங்கள் இந்தியாவில் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: நகைக்காக மூதாட்டியை கொன்று சாக்கு மூட்டையில் அடைத்து காவிரியில் வீசிய குடும்பத்தினர்...!