குழந்தைகள் போல் சறுக்குமரம் விளையாடும் கரடியின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள்,  பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. வேகமாக சென்றுக்கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில் சில வைரல் வீடியோக்கள் அவர்களை சிறிது நேரம் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. 


 




தற்போது, சுவாரஸ்யமான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் செய்யும் குறும்புதனமான வீடியோவை விட, விலங்குகள் சேட்டை செய்யும் வீடியோக்கள் மிகவும் ரசித்து பார்க்கும் படியாக இருக்கும்.  குரங்கு, யானைகள் குறுப்பு தனத்தில் கில்லாடி என்றால், வைலண்டாக இருந்துக்கொண்டு சைலண்டாக குறும்பு செய்யும் விலங்குகளில் கரடியும் ஒன்றாகும். அந்த வகையில், கரடி ஒன்று சறுக்கு மரத்தில் விளையாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில், சறுக்கு மரத்தின் மீது ஏறும் கரடி முன்பக்கம் சறுக்காமல், பின்பக்கமாக சறுக்கி விளையாடுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த நபர், ‘எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் இருக்க தானே செய்யும்’ எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் சுவாரஸ்யமான வீடியோக்கள்:


Watch Video: ‛பீச் வாலிபால்’ விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி... பிசிசிஐ வெளியிட்ட ‛பிட்னஸ்’ வீடியோ!


Watch Video: ஒரே ஓவரில் 4 சிக்சர்கள்... ஹாட்- ட்ரிக் வெற்றியை தட்டித் தூக்கிய பாகிஸ்தான்! ஆட்டம் காட்டிய ஆப்கான்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண