பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தானே, இனிப்பு இல்லாமல் எந்த கொண்டாட்டமும் இல்லை. இன்றைய கொரோனா சூழ்நிலையில் அனைவரும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உணவில் அதிக கவனம் செலுத்த தொடங்கியிருக்கின்றனர். அவர்களுக்காக இந்த தீபாவளியை மேலும் ஆரோக்கியமானதாக மாற்ற ஊட்டச்சத்து மிக்க லட்டு ரெசிபி பற்றி தெரிந்து கொள்வோம்.
சத்து உருண்டை செய்வதற்கு தேவையான பொருள்கள்
ஆளி விதைகள் - 200 கிராம்
நாட்டுச்சர்க்கரை - 200 கிராம்
பாதாம் - 50 கிராம்
முந்திரி - 25 கிராம்
வெள்ளரி விதை - 50 கிராம்
பூசணி விதை - 50 கிராம்
சூரிய காந்தி விதை - 50 கிராம்
கருப்பு எள் - 100 கிராம்
ஏலக்காய் - 5
பேரீச்சம்பழம் - 50 கிராம்
சுக்குத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேன் - 50 கிராம்
நெய் - 100 கிராம்
வெல்லம் - 100 கிராம்
செய்முறை
- பாதாம் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் அதன் தோல்களை நீக்கி விட்டு, உலர வைக்க வேண்டும்.
- ஆளி விதைகளை லேசாக வறுத்து கொள்ளவும்.
- முந்திரி, , பாதாம், வெள்ளரி விதை, பூசணி விதை, சூரிய காந்தி விதை, கருப்பு எள் ஆகியவற்றை தனி தனியாக வறுத்து கொள்ளவும்.
- தனித்தனியாக வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும் .
- பேரீச்சம் பழங்களை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- வறுத்த பொருள்கள் மற்றும் பேரிச்சம் பழங்களை தட்டில் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
- இதனுடன் தேவையான அளவு நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள், சுக்குத்தூள், சிறிதளவு தேன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
- வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லப்பாகு தயாரிக்கவும்.
- இந்த வெல்லப்பாகை அரைத்து வைத்த கலவையுடன் கலந்து வெதுவெதுப்பான பதத்துடன், உருண்டைகளாக பிடிக்கவும்.
தீபாவளிக்கு முன்னதாக இன்று செய்தால் கூட பத்து நாட்கள் வரை கெடாமல் அப்டியே இருக்கும். ஊட்டச்சத்து மிக்க, இனிப்பான லட்டு ஆகும். முழுக்கு முழுக்க இயற்கை சர்க்கரையால் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு செய்யும் போது இனிப்பு சுவையை குறைத்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான தீபாவளி பலகாரங்கள் வரிசையில் அடுத்த ஊட்டச்சத்து மிக்க பலகாரத்தை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.