சென்னை, திருமுல்லைவாயலில் அளவுக்கு மீறி குடித்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியைப் பிரிந்து சோகம்
சென்னை, திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 38). அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் இவர் பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் பெருங்களத்தூரைச் சேர்ந்த வந்தனா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், முன்னதாக கருத்து வேறுபாடு காரணமாக சத்தியசீலனை விட்டுப் பிரிந்த அவரது மனைவி வந்தனா, பெருங்களத்தூரில் உள்ள தன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 8 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், நேற்று முன் தினம் (ஜூலை.02) மதியம் தனது காரை சர்வீஸ் கொண்டு செல்வதாக தனது தாய் மெர்சியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார் சத்தியசீலன்.
போதையில் காருக்குள் மயக்கம்
பிறகு, திருமுல்லைவாயில், சிடிஎச் சாலை, அம்பேத்கர் சிலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு சாலையோரம் காரை நிறுத்தி விட்டு மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதை அதிகமான சத்தியசீலன், மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இந்நிலையில், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இரவு 11 மணியளவில் திருமுல்லைவாயில் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து அங்கு சென்று காவல் துறையினர் பார்த்தபோது காருக்குள் அளவுக்கு மீறிய போதையால் சத்தியசீலன் உயிரிழந்து கிடந்தார்.
இதனையடுத்து சத்திய சீலனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதை விபத்துகள்
மதுபோதையில் ஒரு பக்கம் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மரணங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முன்னதாக திருநெல்வேலியில் மது போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து தொழிற்பயிற்சி, பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு காவல் உதவி ஆய்வாளா் தில்லைநாயகம் தலைமை வகித்த நிலையில், கல்வி நிலையங்களில் மாணவா்கள் எவ்வாறு நடத்தினர். இதில், பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!
இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்