மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகரில் 73 வயது முதியவரை குஜராத் போலீஸார் கைது செய்தனர். அவர் கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் செய்த  கொலை குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


சீதாராம் பதனே என்ற அந்த முதியவர் கடந்த 1973-ம் ஆண்டு அகமதாபாத்தின் சாய்ஜ்பூர் பகுதியில் உள்ள மணி சுக்லா என்பவரை கொலை செய்தார். அப்போது சீதாராமின் வயது 27 என்று போலீஸார் தெரிவித்தனர். மணி சுக்லா அவரது வீட்டு உரிமையாளர் ஆவார். அப்போது வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த சீதாராம் தன்னுடன் சகோதரர்கள் மகாதேவ், நாராயண் ஆகியோரை தங்க வைத்திருந்தார்.


திடீரென ஒரு நாள் அவரது வீட்டு உரிமையாளர் கொலை செய்யப்பட்டு இருந்தார். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததுடன் வாடகைக்கு இருந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Crime: கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வாலிபர் கைது - கோவையில் போலீசார் விசாரணை


அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், சர்தார்நகர் காவல் நிலையத்திற்கு வந்த அகமதாபாத் காவல் ஆணையர் பழைய வழக்கு கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தேடப்பட்டுவரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டு சென்றார்.


இதையடுத்து மகாராஷ்டிர போலீஸாரின் உதவியுடன் சீதாராம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.