கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்க வந்த இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் மலையாள நடிகர் வினீத் தட்டில் கைது செய்யப்பட்டார். ஆலப்புழா துறவூரைச் சேர்ந்த அலெக்ஸை கொல்ல முயன்றதாகவும், காயமடைந்த அலெக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.



நடிகர் வினீத் தட்டில்


மறைந்த இயக்குனர் சச்சி இயக்கத்தில், பிஜு மேனன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்து தேசிய விருது வாங்கிய அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் வினீத் தட்டில் டேவிட். மேலும் இவர் அங்கமாலி டைரீஸ், ஆடு-ஒரு பீகர ஜீவி ஆணு 2, ஜூன், திருச்சூர் பூரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள புத்தன்பீடிகா பகுதியில் இவர் வசித்து வருகிறார்.


தொடர்புடைய செய்திகள் : வாட்ச் திருடியதாக மாணவனை அடித்துக் கொலை செய்த ஆசிரியர்கள்.. அதிர்ந்த கிராமம்.. தீவிர விசாரணை..


கடன் பிரச்சனை


நடிகர் வினீத் தட்டில் டேவிட் ஆலப்புழாவை சேர்ந்த அலெஸ்சிடம் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.3 லட்சத்தை அலெக்ஸிடம் திருப்பி கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ.3 லட்சம் பணத்தை வினீத் தட்டில் டேவிட் திருப்பி தராமல் இழுத்தடித்த நிலையில், வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது அலெக்ஸை வினீத் சரமாரியாக வெட்டியுள்ளார். 



சரமாரி வெட்டு


வினீத் தட்டில் டேவிட்டுக்கும் அலெக்ஸுக்கும் பணத் தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் அலெக்ஸ் வினீத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அலெக்ஸை வினீத் வாளை எடுத்து சரமாரியாக வெட்டினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அலெக்ஸை மீட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அலெக்ஸை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 


கைது நடவடிக்கை


இதனை தொடர்ந்து நடிகர் வினீத் தட்டில் டேவிட் மீது வழக்குப் பதிவு செய் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்த அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அலெக்ஸ் உடல்நிலை தேறிய உடன் அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.