திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதனுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் இடையே நடந்த விவாதம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.. அது என்ன விவாதம் பார்க்கலாம்.
சென்னையில் சீதா ராமம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற துல்கரிடம், “படத்தில் உங்க பேரு ராம் சொன்னீங்க.. பட தலைப்பில் இருக்கு.. ராமம்னா என்ன..? என்று கேட்டார்.. அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “ அவங்க ஒரு கதையை பற்றி சொல்லும்போது இரண்டையும் ஒன்றாக சேர்த்து சீதா- ராமம் என்று வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்..
அதனைத்தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், இல்லைங்க..எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.. அது சீதாராமம் மா.. இல்லை சீதா நாமமா.. சீதா ராமனா.. எனக்கு ராமம்க்கு அர்த்தம் தெரிஞ்சாவணும் என்று கேட்டார்..
அதற்கு பதிலளித்த துல்கர், “ நான் அதை எழுதல. அதை பற்றி சொல்றதுக்கு என்னோட இயக்குநர் இங்க இருந்திருக்கணும். ஆனால் அவரும் இங்கு இல்ல.சூழ்நிலை இப்படி இருக்க நான் என்ன பண்ண முடியும்..” என்றார்.
தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன்.. அப்படினா அது என்னன்னு தெரியாமலேயே நடிச்சீட்டீங்களா என்று கேட்க.. நான் இந்தப்படத்தில் கமிட் ஆகும் போகும் போது படத்திற்கு பேரு வைக்கல.. ஒரு மாதத்திற்கு முன்னாடிதான் பேரு வைத்தார்கள்” என்றார்.
இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலரது நடிப்பில உருவாகியிருக்கும் திரைப்படம் ‛சீதா ராமம்’.தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் வருகிற ஆக 5-இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேற்று முன்தினம் இந்தப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், நேற்றைய தினம் தமிழ் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் வெளியீடு விழா நேற்று சென்னையில் நடந்தது.
நேற்றைய தினம் தெலுங்கு டிரைலரை வெளியிட்டனர். இன்று(ஜூலை 26) தமிழ் டிரைலரை சென்னையில் வெளியிட்டனர்.