சாய்பாபா கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டதால் கண்ணனேந்தல் பகுதியில் உள்ள தனி நபருக்கு சொந்தமான சாய்பாபா கோயிலை நிரந்தரமாக திறக்க அனுமதி அளிக்க கூடாது என கூறி கிராமத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.
கோயில் பூசாரி போக்சோவில் கைது
மதுரை மாநகராட்சி 8-ஆவது வார்டுக்கு உட்பட்ட கண்ணனேந்தல் கிராமத்தில் தனியார் மூலம் நடத்தி வந்த சாய்பாபா கோயிலின் பூசாரி சசிகுமார் என்பவர் 17வயது மாணவியை சாய்பாபா கோயிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தததாக சசிகுமார் என்பவரை போக்சோ வழக்கின் கீழ் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் கோயில் பூசாரி சசிகுமார் மனைவி லலிதாகுமாரி உடந்தை என அவரது மனைவியையும் வழக்கில் சேர்த்துள்ளனர்.
சாய்பாபா கோயிலை திறக்க எதிர்ப்பு
இந்நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி பூசாரி சசிக்குமார் மனைவி லலிதாகுமாரி வெளிநபர்கள் ,காவல்துறை துணையோடு கோயிலில் குடிபுகுந்துள்ளனர். இதனால் கிராமத்தில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும் இது தொடர்பாக 11 ஆம் தேதி கண்ணனேந்தல் கிராம கூட்டம் நடைபெற்று மீண்டும் சாய்பாபா கோயிலை திறக்கக்கூடாது என்றும், அப்படி திறந்தால் ஏற்கனவே நடந்த பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு சாத்திய கூறுவுள்ளதாக கூறி கிராம கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் கோயிலை கட்ட அனுமதிக்ககூடாது என கூறி கண்ணனேந்தில் கிராமத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
புனிதத் தன்மை கெட்டுவிடும்
அந்த மனுவில் கண்ணனேந்தல் பகுதியில் உள்ள மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி இது போன்ற தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கிராமமான கண்ணனேந்தலின் புனிதத் தன்மை கெட்டுவிடும் எனவும், இவர் கோயில் நடத்தவில்லை என்றால் வேறொருவர் வைத்து நடத்துவார்கள். இதுபோல் பாலியல் தொல்லை நடைபெற வாய்ப்புவுள்ளது. ஆகவே கண்ணனேந்தல் கிராமத்தில் சாய்பாபா கோயிலை மீண்டும் திறக்கக் கூடாது என்று கிராம கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் கிராம கூட்ட தீர்மானத்தை பரிசீலனை செய்து கண்ணனேந்தல் சாய்பாபா கோவிலை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் இந்த கட்டடம் வந்துட்டா போதும்.. 5 ஆயிரம் பேருக்கு அசால்டா வேலை கிடைக்கும் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அதிமுகவில் இணைவது தொடர்பா எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை - ஓபிஎஸ்