துவங்கிய நாளில் இருந்து சுமார் 20 மாதத்திற்குள் பணிகள் முடியும் எனவும் சொல்லப்படுகிறது.
மதுரையில் ஐ.டி பூங்காக்கள்
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவைக்கு அடுத்தபடியாக மதுரையில் ஐ.டி பார்க்குகள் உள்ளன. மேலும் மதுரையில் உருவாக்கப்பட உள்ளன. இதனை ஏற்கனவே சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மண்பரிசோதனை உட்பட பல்வேறு பணிகள் நேரடி ஆய்வுகள் மதுரையில் செய்யப்பட்டுவிட்டது. மதுரையில் இலந்தைக்குளம் மற்றும் வடபழஞ்சி உள்ளிட்ட பகுதியில் தற்போது (IT PARK) மென் பொருள் பூங்காக்கள் செயல்படுகின்றன.
அதே சமயம், ஆங்காங்கே வெவ்வேறு பகுதிகளில் தனியார் மென் பொருள் நிறுவனங்களும் செயல்படுகின்றன. இதுபோக ஏராளமான இளைய தலைமுறையினர் ஒர்க்ஃபிரம் கோம் என்ற முறையில், வீட்டில் இருந்தபடியே நாட்டிலுள்ள பல்வேறு ஐ.டி நிறுவனங்களுக்காக பணியாற்றி வருகின்றனர். இதன்மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் மதுரையின் பங்கு முக்கியமானதாக மாறிவருகிறது.
மதுரை மாநகராட்சி தரப்பில் ஒதுக்கீடு
இந்த சூழலில் பல்வேறு விதமான வசதிகள் கொண்ட ஐ.டி பார்க்குகள் மதுரையில் தேவை என்பதும் கோரிக் கையாக இருந்தது தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க தேவை என்பதை உணர்ந்து கொண்டுவரப்பட உள்ளது. இதையடுத்து, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் நெல் வணிக வளாகத்திற்கு இடையில் மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தை டைடல் பார்க்கிற்காக மதுரை மாநகராட்சி தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சுமார் 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 12 தளங்களுடன் கூடிய மதுரை டைடல் பார்க்கிற்கான நிர்வாகரீதியான பணிகள் நடந்து வந்தன. கட்டுமானப் பணிக்கான நிறுவனத்திற்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.289 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள இந்த டைடல் பார்க்கால், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 ஆயிரம் பேர் வரை வேலை வாய்ப்பு பெற உள்ளனர். இத்திட்டத்திற்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. பின்னர், சிறு திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு அதற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
கட்டப் பணிகள் துவங்க உள்ளது
ஒரே பிளாக் என்ற அடிப்படையில் 72 மீட்டர் நீளத்திற்கு கட்டுமானம் மேற்கொள்ளவுள்ள தரைத்தளம் மட்டும் 4,008.71 சதுர அடியில் அமைகிறது. மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மறுசுழற்சி முறையில் 234 கே.எல்.டி தண்ணீர் உற்பத்தி செய்யப்படும். 164 எம்3 கொள்ளளவுள்ள மழைநீர் வடிகால் முறை அமைகிறது. அனைத்துவித மான முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிக் கான துவக்கவிழா நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக கட்டடப் பணியை துவக்கி வைக்கிறார்.
இதையடுத்து, டைடல் பார்க் அமையவுள்ள பகுதியில் சீமைகருவேல மரங்களை அகற்றுதல், மேடு, பள்ளங்களை சரிசெய்தல், கழிவுப்பொருட்களை வெளியேற்றுதல், தேவையான இடங்களில் பள்ளம் தோண்டுதல் உள்ளிட்ட பணிகளை கட்டுமான நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. துவக்க விழா முடிந்ததும் உடன டியாக கட்டடப் பணிகள் துவங்கும். துவங்கிய நாளில் இருந்து சுமார் 20 மாதத்திற்குள் பணிகள் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் வேகமெடுக்கும் என சொல்லப்படுகிறது. நாளை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இந்த பணியை துவக்கி வைக்க உள்ளார், என்பது மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முன்வர வேண்டும் - அமைச்சர் எல்.முருகன்