7 மணிநேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 2 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான சொத்தின் ஆவணங்கள் பறிமுதல்



மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், தற்போதைய உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி முதல்வருமான ஓ.ரவி., கடந்த 2013- ம் ஆண்டு முதல் 2020 - ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் வீடுகள் மற்றும் 22 வாகனங்கள் என சுமார் 2 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் சொத்து சேர்த்தாக  மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான ஓ.ரவி மற்றும் அவரது மனைவி சுமதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று காலை முதலே சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் செக்காணூரணியில் உள்ள அவரது மகள் சபீதா வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்., 

இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*




 









7 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.