தி.மு.க.,வில் புகைச்சல்


மதுரை மாவட்டத்தில் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் பி.மூர்த்தியும், மத்திய தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும், வடக்கு தொகுதியில் கோ.தளபதியும் எம்.எல்.ஏ.,வாக உள்ளனர். மற்ற தொகுதியில் கூட்டணி கட்சி மற்றும் அ.தி.மு.க., மற்றும் ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பதவியிலும் உள்ளனர். மூன்று தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் முக்கிய நபர்களாக பார்க்கப்படும் நிலையில் தி.மு.க.,வில் மறைமுகமாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. நேரடியாக பகை வெளிப்படவில்லை என்றாலும், மதுரை தி.மு.க.,வில் புகைச்சல் இருந்து வருகிறது. இந்நிலையில் வடக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.,வும்., தி.முக மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான கோ.தளபதியின் வீட்டு முன் தி.மு.க நிர்வாகி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தி.மு.க நிர்வாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி மானகிரி கணேசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தி.மு.க. நிர்வாகி உயிரிழப்பு


மானகிரி கணேசன் ஆளுநரை மாற்றக் கோரி கடந்த ஆண்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது, உடல்நலன் பாதித்து குறித்து தி.மு.கவினர் கண்டுகொள்ளவில்லை என்றும், மானகிரி பகுதி தி.மு.க வட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணா என்பவர் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது குறித்து திமுக தலைமைக்கும், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் கோ.தளபதிக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார். இந்தநிலையில் நேற்று காலை மூலக்கரை பகுதியில் உள்ள திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதியின் வீட்டின் முன்பாக தீக்குளித்து 90% காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தி.மு.க., மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., மாவட்ட செயலாளரை சந்திக்க சென்ற சில நிமிடங்களில், தீக்குளித்து தற்கொலை செய்து பரிதாபமாக உடல் எரிந்து உயிரிழந்தது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுகிறது.


தற்கொலை எண்ணம் வேண்டாம் 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.  மாநில உதவி மையம் :104 சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,  எண்; 11, பார்க் வியூவ் சாலை,  ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)  


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Gujarat Floods: குஜராத்தில் கனமழை - 35 பேர் பலி! வெள்ளத்தால் சின்னாப்பின்னமான சாலைகள் - வீடியோ


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதா? - மத்திய அரசுக்கு எதிராக கைகோர்த்த தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்!