தி.மு.க., வட்டச் செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரது உறவினர்கள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க., வில் அண்மையில் பதவி
மதுரை மாநகர் தி.மு.கவின் 77 -வது வட்ட செயலாளராக எம்.கே.புரம்., தெற்கு சண்முகபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் அண்மையில் பதவிபெற்று கட்சிப் பதவியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 27 -ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் வீட்டு வாசலிலே தி.மு.க., வட்ட செயலாளர் திருமுருகன் படுகொலை செய்யப்பட்டார்.
- 13ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டுபிடிப்பு! தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
தனிப்படை தீவிர விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக ஜெய் ஹிந்த்புரம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தி.மு.க., வட்டச் செயலாளர் திருமுருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருமுருகனின் சித்தப்பாவின் மகனும் அ.தி.மு.க., வட்ட செயலாளருமான தவக்குமார் மற்றும் அவரது மனைவி சோனியாகாந்தி, மருமகன் ராஜா மற்றும் உறவினர்களான பிரகாஷ், அழகுராஜா, வெங்கடேசன் கம்மாபாண்டி உள்ளிட்ட 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டை ஒப்பந்தம் எடுப்பதில் தவக்குமார் மற்றும் திருமுருகன் ஆகிய இடையே மோதல் இருந்து வந்துள்ளதும், இருவரின் உறவினராக இருந்தபோதிலும் குடும்பத்தில் இருந்த கருத்துவேறுபாடு காரணமாகவும் கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. திமுக வட்டச் செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரது உறவினர்கள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே மிஸ் பண்ணாதீங்க பாஸ் - உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மூகூர்த்த கால் நடும் விழா
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Viral Video: கையில் பீர்.. உற்சாக நடனம்.. இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லியின் வைரல் வீடியோ!