விழுப்புரம்: வானூர் அருகே சட்ட விரோத கல் குவாரி நடத்தி கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுத்திடகோரி வானூர் பகுதி கவுன்சிலர்கள் முதல்வர் தனி பிரிவிற்கு புகார் அளித்தனர்.


கனிமவள கொல்லை


விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனிம வளம் மிகவும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விவசாயம் செழித்து வந்த நிலையில் தற்போது அரசு அனுமதி இல்லாமல் அப்பகுதியில் கல்குவாரிகள், செம்மண் கோரிகள் என கனிமவளக் கொள்ளைகள் ஈடுபட்டு வருவது வெட்ட வெளிச்சமாக அப்பகுதியில் தெரிகிறது. இருப்பினும் அப்பகுதியில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். கனிமவள கொள்ளையால் விவசாயம் பாதித்துள்ளது. இந்த நிலையில் வானூர் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்.




புகாரில் கூறிருப்பதவாது...


விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், சுத்துக்கேணி அஞ்சல், கடகம்பட்டு கிராமம், மேட்டுத்தெரு, எண்.63 என்ற விலாசத்தில் வசித்து வரும் பெருமாள் குமாரர் லோகநாதன் என்பவர், விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், எறையூர் கிராமத்தில் சர்வே எண்.101-ல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணை ந.க.அ/பு & சு/1039/2015 நாள் 02.02.2020 குத்தகை காலம்  25.07.2020 முதல் 24.07.2025 வரை அரசு அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக சர்வே எண்.100/2B-ல் உள்ள சுமார் ஏக்.2.00 நிலத்தை 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி கிரையம் பெற்று, அரசு குத்தகை அனுமதி பெறாமல் அரசு அதிகாரிகளுக்கு மாதம் மாதம் லஞ்சம் கொடுத்து மேற்படி இடத்தில் 200 அடி ஆழத்திற்கு வெடி வைத்து கல் குவாரி நடத்தி வருகிறார். அரசு அனுமதி பெற்ற இடத்தைவிட அனுமதி பெறாத சர்வே எண்.100/2B இடத்தில் சுமார் ரூ.20 கோடிக்குமேல் கல் உடைத்து சட்டவிரோதமாக வேலை செய்து, அரசாங்கத்தை ஏமாற்றி வருமானம் ஈட்டி வருகிறார். அவருக்குத் துணையாக அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். எனவே ஐயா அவர்கள், மேற்படி சர்வே எண்.100/2B -ல் உள்ள கல்குவாரியில் நடக்கும் வேலையை நேரில் பார்வையிட்டு, சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியை நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  13வது வார்டு கவுன்சிலர் புகாரில் குறிபிட்டுள்ளார்.




அதி பயங்கர வெடி


தொடந்து, விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கடகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு.S.M.N சக்திமுருகன் என்பவர் லோகநாதன் த/பெ பெருமாள் என்பவர் பெயரில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், எறையூர் கிராமத்தில் சர்வே எண். 100/2B -ல் உள்ள சுமார் 2 ஏக்கர் நிலத்தை 19.01.2022 ஆம் தேதியில் கிரையம் பெற்றார். அந்த நிலத்தில் அரசின் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக கல் குவாரி நடத்தி வருகிறார். அதி பயங்கர வெடி வைத்து சுமார் 200 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி வி விலை உயர்ந்த கிரானைட் கற்களை மேற்கண்ட திரு.S.M.N சக்திமுருகன் என்பவர் கடத்தி சுமார் ரூ.30 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளார். எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உரிய விசாரணை செய்து சட்ட விரோதமாக கனிமவள கொல்லையில் ஈடுபட்டவர் மீதும், முறைகேட்டிற்கு துணை நின்ற அரசு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வானூர் 23து வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி மாகலிங்கம் புகாரில் குறிபிட்டுள்ளார்.