மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கிய மாவட்டங்களில் ஒன்று ஜபல்பூரும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி, அங்குள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி சமூக வலைதளமான பேஸ்புக்கை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, அவருக்கு பேஸ்புக் மூலமாக 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமாகியுள்ளார்.


நாளடைவில் மிகவும் நெருங்கிய நண்பர்களான அந்த சிறுமியும்,. 12ம் வகுப்பு மாணவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, மாணவியை விஜய்நகரில் உள்ள தேநீர் கடையில் சந்திக்க அந்த 12ம் வகுப்பு மாணவர் அழைத்துள்ளார். மாணவியும் அந்த மாணவரின் அழைப்பை ஏற்று கடந்த நவம்பர் 6-ந் தேதி அவரை சந்திக்க சென்றுள்ளார்.




அங்குள்ள தேநீர் விடுதி ஒன்றில் மாணவியை சந்தித்த மாணவர், அவரை வேறு ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால், மாணவி அழுதுகொண்டே தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர், சிறிது நாட்கள் கழித்து அந்த மாணவியை மிரட்டி மீண்டும் மாணவர் தேநீர் விடுதிக்கு அழைத்துள்ளார். அந்த 12ம் வகுப்பு மாணவரின் மிரட்டலுக்கு பயந்த மாணவி தேநீர் விடுதிக்கு சென்றுள்ளார். தனது மிரட்டலுக்கு பயந்த மாணவியை, அந்த மாணவர் மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.


இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் உடனடியாக அந்த 12ம் வகுப்பு மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவரின் தந்தை அந்த பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.




இந்தியாவில் கடந்த சில காலமாக சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்படும் இதுபோன்ற பழக்கங்கள் விபரீதத்தில் முடிவடைகிறது. இதன்காரணமாக பெண்கள் சமூக வலைதளங்களில் நண்பர்களாக பழகுபவர்கள் உள்பட அனைவரிடமும் மிகவும் எச்சரிக்கையுடன் பழகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 


மேலும் படிக்க : Drang Frozen Waterfall: அதிசயமே அசந்து போகும்.. அந்தரத்தில் உறைந்து நிற்கும் நீர்வீழ்ச்சிகள்... இது காஷ்மீர் ஜில்.!!


மேலும் படிக்க : Watch Video: உடம்பு முடியலனு ஜாமீன்; வெளியே வந்து கிரிக்கெட்டா? தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பிரக்யா சிங்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண