உயிரை பணயம் வைத்து, பைக்கில் சென்று ஓடும் லாரியில் ஏறி  திருடப்பட்ட வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


ஓடு லாரியில் திருட்டு:


மத்திய பிரதேச மாநிலத்தில் ஓடும் லாரியில் இருந்து, மூன்று பேர் பொருட்களை திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆக்ரா-மும்பை நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவத்தை, லாரியிலிருந்து சற்று தூரத்தில் பயணித்து வந்த கார் ஓட்டுநர், இதை வீடியோவாக பதிவு செய்தார்.   


அந்த வீடியோவில், ஒரு பைக்கில் ஒரு நபர், லாரியின் பின்னால் மிக நெருக்கமாகப் பின் தொடர்கிறார். அதே நேரத்தில் அவரது கூட்டாளிகள் பொருட்களை திருட லாரியின் மீது பொருட்களை திருட ஆரம்பிக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரும் லாரியின் மீது ஏறி, பொருட்கள் மூடியிருந்த தார்பாய் கவரை அறுக்கின்றனர். 






பின்னர் பொருட்களை எடுத்து, சாலையில் தூக்கி கீழே வீசுகின்றனர். பின்னர் இருவரும், ஒருவர் பின் ஒருவராக லாரியில் இருந்து, அவரது கூட்டாளியின் பைக்கில் இறங்குகின்றனர். சிறிது, கரணம் தப்பினாலும் மரணம்தான், லாரியின் ஓட்டுநருக்கு தெரியாமல் உயிரை பணயம் வைத்து திருடும் கும்பலை பார்க்கும் போது, இவர்கள், இதில் மிகவும் கை தேர்ந்தவர்கள் போன்றுதான் தெரிகிறது.   


இதற்கிடையில், தேவாஸ் மற்றும் தாரானா ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள மக்சி காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) பீம் சிங் படேல் தெரிவிக்கையில், இந்த சம்பவம் குறித்து தனக்கு எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை தெரிவித்திருக்கிறார். 


நெட்டிசன்கள் கருத்து: 


 இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த பலரும், சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர் தெரிவிக்கையில், இவர்கள் மிகவும் தைரியமானவர்களாக உள்ளனர், ரிஸ்க் எடுக்க தயங்காமல் உள்ளனர். ஆனால், இவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர் என பயனர் ஒருவர் கருத்து பதிவிட்டிருக்கிறார்.   


மற்றொரு பயனர் தெரிவித்ததாவது, இது ஒரு சினிமா காட்சி போல இருக்கிறது. இவர்களுக்கு பயம் இல்லை, உயிருக்கு அச்சமின்றி சாதாரணமாக  இருக்கிறார்கள்.


இவர்களின் தைரியத்தின் அளவானது, விண்ணை முட்டும் அளவில் இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 


Also Read: Watch Video: சினிமாவை மிஞ்சிய சண்டை! நட்ட நடுரோட்டில் கொடூரமாக அடித்துக் கொண்ட இளைஞர்கள்!