தரங்கம்பாடி அருகே மாமாகுடி கிராமத்தில் அமைந்துள்ள கோமளாம்பிகை என்னும் இலுப்பை தோப்பிடையாள் காளியம்மன் ஆலயத்தில் 92 ஆண்டாக நடைபெற்ற பச்சைகாளி, பவளகாளி உற்சவத்தை  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.


மாமாகுடி இலுப்பை தோப்படியாள் காளியம்மன் காளியாட்டம்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாமாகுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகு கோமளாம்பிகை என்னும் இலுப்பை தோப்படியாள் ஶ்ரீ காளியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் காளியாட்டம் உற்சவம் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் இந்தாண்டு வைகாசி மாதம் காளி ஆட்ட உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 


Astrology: ஜூன் 3 ஆம் தேதி நேர்கோட்டில் 6 கிரகங்கள்! - 12 ராசிக்காரர்களுக்கும் நடக்கப் போகும் அதிசயம்!




92 -வது ஆண்டு விழா


92 -வது ஆண்டாக நடைபெற்ற  உற்சவத்தை முன்னிட்டு கிராமமக்கள் காப்புகட்டி விரதம் இருந்து பால்குடம் காவடி எடுத்து மாரியம்மன், காளியம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மாமாகுடி பிள்ளையார்கோயில் இருந்து அலகுகாவடி, அலகு குத்தியும் பக்தர்கள் வீதியுலாவாக ஆலயத்திற்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். 


கரூர் ஸ்ரீ மகா பெரிய காண்டி அம்மன் ஆலய வைகாசி திருவிழா - ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்ட வந்த பக்தர்கள்




பச்சைக்காளி, பவளக்காளி திருநடன உற்சவம் 


விழாவின் முக்கிய நிகழ்வாக பச்சைக்காளி, பவளக்காளி திருஉருவத்திற்கு மாரியம்மன் ஆலயத்தில் படையலிட்டு ஊர்வலமாக காளியம்மன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு கோயிலில் காளியம்மன் கரகம் புறப்பாடு செய்யப்பட்டு காளி ஆட்ட உற்சவம் மேளதாள வாத்தியங்கள் முழங்க தொடங்கியது. பச்சைக்காளி பவளக்காளி ஆகிய இரு அம்மனிடமும் பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றகோரி மாலை அணிவித்து வணங்கினர். தொடர்ந்து பச்சைக்காளி பவளக்காளி ஆக்ரோசத்துடன் திருநடனம் புரிந்தது காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது‌.  தொடர்ந்து 3 மணிநேரம் இந்த காளியாட்டம் நடைபெற்றது.




Irumbai Mahakaleshwar Temple: உங்களுக்கு பேச்சு குறைபாடு இருக்கா..? - இந்த கோயிலுக்கு போனால் சரளமா பேச்சு வரும்... ஒருமுறை போய்ட்டு வாங்க


பின்னர் காளி ஆட்ட வீதியுலா தொடங்கியது விடிய விடிய வீதியுலா சென்ற காளியானது காலை கோயிலை வந்தது. இந்த காளி ஆட்டத்தை காண மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். மேலும் காளி ஆட்டத்தை தங்கள் செல்போன்களில் ஆர்வத்துடன் படம்பிடித்தனர். விழாவை முன்னிட்டு பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.