புதுக்கோட்டை மாவட்டம் மாலையீடு சண்முகா நகரை சேர்ந்தவர் செல்வராஜ்,இவரது மகன் வினிஷ் (28),இவர் 
உள்ளூர் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினிஸ் மதுரை மாவட்டம் பொன்மேனி நெடுஞ்சாலையில் உள்ள ராகவேந்திரா நகரில் வசிக்கும் உமாபதி என்பவரின் மகள் நிவேதாவை(25) காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மண்ணச்சநல்லூர் இந்திரா நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள  வினிஷின் உறவினரான பெரியப்பா வீட்டிற்கு இருவரும் வந்துள்ளனர்.அப்போது அவருடைய பெரியப்பா யார் இந்த பெண் என்று கேட்டுள்ளார், நானும் இந்த பெண்ணும் காதலிக்கிறோம் என்று வினிஷ் கூறியுள்ளார்.ஒரு சிறிய வேளை விசயமாக திருச்சி வந்துள்ளோம் என்றும் முடிந்த பிறகு நாங்கள் சென்றுவிடுவோம் என்று தெரிவித்தை அடுத்து அவரது உறவினர் வீட்டில் மாடியில் தங்கியிருந்தனர். திடிரென இந்த காதல் ஜோடி அதிகாலை தூக்குமாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே வினிஷ் பலியானார், உயிருக்கு ஆபத்தான நிலையில் நிவேதா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




திருச்சி மணச்சநல்லூர் அருகே உறவினர் வீட்டிற்கு வந்த காதல் ஜோடி தூக்கு மாட்டி தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்கொலைக்கு என்ன காரணம் என்று  மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர்கள் எதிர்ப்பே இந்த அளவிற்கு விபரீத முடிவை எடுப்பதற்கு காரணமாக அமைந்தாக உறவினர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். மேலும் வினிஷின் பெற்றோர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர். அப்போது வினிஷின் காதல் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்ததாகவும், இருவருக்கும் எப்படி காதல் ஏற்பட்டது என்று தெரியவில்லை எனவும், ஆனால இந்த காதல் சம்பவம் எங்களுக்கு தெரிந்த பிறகு  இப்பொழுது இதுபோன்று செயல்களில் ஈடுபடகூடாது எனவும் என நாங்கள் கண்டித்தோம் என்று பெற்றோர்கள் தரப்பில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.




மேலும் பெண் வீட்டிலும் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவு, இனிமேல் வினிஷ்யுடன் பேச கூடாது, அவனை பார்க்க கூடாது என தொடர்ந்து கண்டித்து வந்தாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் தொலைபேசியில் கூட பேசமுடியாமல் சில நாட்களாக தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஊரைவிட்டு ஓடிபோய் திருமணம் செய்துக்கொள்ளாம் என முடிவெடுத்து திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இருவரும் தனியாக இருக்கும் நேரத்தில் இருவீட்டார்களும் நம்மை சேரவிடமாட்டார்கள் என கூறிக்கொண்டு மன அழுத்ததில் இருவரும் தற்கொலை முயற்சி செய்து இருக்கலாம் என உறவினர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.