மயிலாடுதுறையில் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு லத்தி ட்ரில் கவாத் பயிற்சியில் லத்தியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு தாக்குதல் நடத்த வேண்டும் உள்ளிட்ட பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது.


லத்தி சார்ஜ்


லத்தி சார்ஜ் அல்லது காவல்துறையின் பலத்தைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் சட்டப் புத்தகங்களில் இடமில்லை. ஆயினும்கூட, இந்த நுட்பம் பொதுவாக காவல்துறையினரால் பின்பற்றப்படுகிறது.  லத்தி சார்ஜ் பயன்படுத்த அனுமதிக்கும் சில விதிகளும் உள்ளது‌. ஆனால் அது சில விதிவிலக்குகளில் தொடர்ந்து உள்ளது. CrPC இன் பிரிவு 144 இன் படி, சட்டவிரோத கூட்டம் கலைக்க மறுக்கும்போது மட்டுமே காவல்துறை பலத்தை பயன்படுத்த முடியும்.


Alcazar Facelift Top Features: ஹூண்டாய் அறிமுக செய்ய இருக்கும் புதிய கார் Alcazar - சிறப்புகள் என்ன?




இந்த விதியின் கீழ், பொது அமைதியின்மை அச்சுறுத்தல் இருக்கும்போது, ஒரு கூட்டத்தையோ அல்லது 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுவையோ கலைக்க காவல்துறைக்கு திறன் உள்ளது. ஆனால் இந்த பிரிவுகளில் 'லத்தி அல்லது தடியடி' என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, அந்தப் பிரிவின் உள்ளடக்கம் என்னவென்றால், மாவட்ட மாஜிஸ்திரேட் பொருத்தமானதாகக் கருதினால், சட்டத்திற்குப் புறம்பான ஒன்றுகூடல் "தடுக்கும், அல்லது தடுக்க முனைந்தால், எவருக்கும் இடையூறு, தொல்லை அல்லது காயம் ஏற்படுத்தினால், அதற்கு எதிராக காவல்துறைக்கு உத்தரவிடலாம். 


The GOAT Booking: தொடங்கிய விஜய்யின் The GOAT முன்பதிவு! மின்னல் வேகத்தில் நடக்கும் டிக்கெட் விற்பனை!




காவலர்களுக்கு பயிற்சி 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வாரம் தோறும் காவலர்களுக்கு பரேட் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருப்பதி தலைமையில் காவலர்களுக்கு சிறப்பு லத்தி ட்ரில் கவாத் பயிற்சியானது அளிக்கப்பட்டது. 


iPhones Stolen: சென்னைக்கு வந்த 1500-ஐ போன்கள்.. லாரியுடன் கடத்திச்சென்ற கொள்ளையர்கள் : எப்படி?




லத்தியை சுழற்றிய  காவலர்கள் 


இந்த பயிற்சியில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டத்தில் உள்ள சுமார் 250 -க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் காவலர்களுக்கு அசாதரணமான சூழ்நிலை ஏற்படும் பொழுது லத்தியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு தாக்குதல் நடத்த வேண்டும் உள்ளிட்ட பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


Joe Root Record: 147 ஆண்டுகால டெஸ்டில் முதன்முறை! புது சகாப்தம் படைத்த ஜோ ரூட் - என்ன?