உலகின் மிகவும் வசதியான மற்றும் சொகுசான போன்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம்  தயாரிக்கும் ஐ போன் திகழ்கிறது. அதிக வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் கூடிய ஐபோனின் விலை மற்ற போன்களை காட்டிலும் அதிகம். இந்தியாவில் இந்த போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது.


1500-ஐ போன்கள் கொள்ளை:


ஹரியானா மாவட்டத்தில் அமைந்துள்ளது குருகிராம். இங்கிருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள 1500 ஐ போன்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் பகுதியில் இந்த கண்டெய்னர் லாரியை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.


இந்த கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு போதைப்பொருள் கொடுத்து அவரை கட்டிப்போட்டு இந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடந்துள்ளது.


சுதந்திர தினத்தில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆப்பிள் நிறுவனத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவில்லை.

பெரும் பரபரப்பு:


இருப்பினும் தகவல் அறிந்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தினரிடம் இருந்து புகார்பெற்ற பிறகு காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்த உள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி கேமராவை கண்காணித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தலைமை காவலர் ராஜேஷ் பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ரூபாய் 11 கோடி மதிப்பிலான ஐ போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.