இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக உலா வந்தவர் லைலா கான். இவர் 2011ம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த பாலிவுட்டையே அதிரவைத்தது.
நடிகை லைலா உட்பட 6 பேர் கொலை:
பிப்ரவரி 2011 இல் லைலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் கொன்ற வழக்கில் நடிகை லைலா கானின் வளர்ப்பு தந்தை பர்வேஸ் தக்கிற்கு இன்று மும்பை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இன்று மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த கொடூரமான வழக்கானது சுமார் 14 ஆண்டுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதியாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பர்வேஸ் தக் காஷ்மீரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர், லைலாவின் தாயார் செலினாவின் மூன்றாவது கணவர் ஆவார். செலினாவின் சொத்து தொடர்பான தகராறு ஏற்பட்ட பிறகு, மனைவி செலினா, அவரது வளர்ப்பு மகளான நடிகை லைலா மற்றும் அவரது குடும்ப உடன்பிறப்புகள் நான்கு பேரையும் பர்வேஸ் தக் கொன்றதாக கூறப்படுகிறது.
மரண தண்டனை:
இந்த கொலை சம்பவமானது 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தையடுத்து, பர்வேஸ் ஜூலை 8, 2012 அன்று கைது செய்யப்பட்டார். இக்கொலை சம்பவத்தில் மனைவி செலினா, இவரது மகள்களான நடிகை லைலா ( வயது 30 ), அவரது மூத்த சகோதரி அஸ்மினா வயது 32, இரட்டை உடன்பிறப்புகள் ஜாரா மற்றும் இம்ரான் வயது 25, உறவினர் ரேஷ்மா மற்றும் ஷெலினா, 51, ஆகியோரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
பிப்ரவரி 2011 ஆம் ஆண்டு நடிகை, அவரது தாயார் மற்றும் அவரது நான்கு உடன்பிறப்புகள் அனைவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் உள்ள வீட்டில் இறந்து கிடந்ததனர். கொலை சம்பவங்கள் நடைபெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பர்வேஷ் தக்கை கண்டுபிடித்தது. இந்நிலையில் லைலா கான் உள்ளிட்ட 6 பேரின் கொலை வழக்கு சுமார் 14 ஆண்டுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொலை வழக்கில், வளர்ப்புத் தந்தை பர்வேஸ் தக்கிற்கு மும்பை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
Also Read; Crime: தென்காசி அருகே மதுவால் வந்த பிரச்னை; கொலையில் முடிந்த கொடுமை