சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் , சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;
திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் நவீன் குறித்து தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலையா என்பதை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தின விசாரணையில் அறிவில் பூர்வமாக பார்க்கும் போது அது தற்கொலை தான் என தெரிகிறது. இந்த விசாரணையை இணை ஆணையர் மேற்கு மண்டலம் அவர் நீரில் கூப்பிட்டு விசாரணை நடத்தினார் என எங்களுக்கு தகவல் இல்லை.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதை (சிசிபி) மத்திய குற்றப்பிரிவு விசாரணை செய்யலாம் அதற்க்குள் உள்ளான தொகை அந்தந்த காவல் நிலைய இணை ஆணையர் உத்தவரின்படி விசாரணை நடைபெறும்.
துணை ஆணையர் விசாரணை நடத்தியது தவறு
இந்த சம்பவத்தில் 40 கோடிக்கு ரூபாய்க்கு மேல் என்பதால் அதனை துணை ஆணையர் விசாரணை நடத்தி இருக்கக் கூடாது அங்கு தான் தவறு நடந்திருக்கிறது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவரை இதுவரை காவல் நிலையம் அழைத்து விசாரிக்கப்படவில்லை.
நவீன் ஜூன் 24 தேதி அவர் வேலையில் இருந்து வெளியேறி இருக்கிறார். அதன் பிறகு தான் அவர் 44,000 கோடி கையாடல் செய்கிறது தெரிய வந்துள்ளது. நவீன் கைகள் கட்டப்பட்டு இறந்து இருப்பதாக தெரிகிறது. இதுபோன்று பல தற்கொலை வழக்குகளில் கைகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பல வழக்குகள் உள்ளது.
ஜனசேனா பிரமுகர் கொலை
சென்னையில் ஏழுக்குணறு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடந்த கொலை சம்பந்தமாக சி.சி.டி.வி காட்சிகளை வைத்து பார்க்கும் பொழுது சந்தேகப்படும் நபர்கள் காரில் சென்றதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஐந்து பேரை கைது செய்து இருக்கிறோம்.
இதில் ஆந்திர மாநிலத்தில் ஜனசேனா கட்சியில் சேர்ந்த இவர்களுக்கு இந்த முறை பதவி வாய்ப்பு அளிக்காமல் இருப்பதற்காண காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டதாக தற்போது விசாரணையில் தெரிகிறது.
போதைப் பொருள் - குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது
நுங்கம்பாக்கம் மதுபானம் கூடத்தில் நடந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை செய்யும் போது போதை பொருள் சம்பந்தமாக பலர் அதில் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் இதில் 27 பேர் குற்றவாளிகளாக கண்டுபிடித்து அதில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் போதைப் பொருட்களை சப்ளை செய்யும் அனைத்து முக்கிய 23 வெளிநாட்டவர்களையும் கைது செய்துள்ளோம். 57 முக்கிய நெட்வொர்க் புள்ளிகளை கைது செய்துள்ளோம்.
த.வெ.கா போராட்டத்திற்கு நீங்கள் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு
இதுவரையில் நாங்கள் அனுமதி தராமல் இருந்ததில்லை அவர்களாக நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்றதற்கு நாங்கள் காரணம் இல்லை.
போக்சோ வாழ்த்துக்களை தவறாக பயன்படுத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என்ற கேள்விக்கு.
போக்சோ வழக்கு என்பது ஒரு முக்கியமான வழக்கு அதை தவறாக பயன்படுத்துவர்கள் மீது சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்கு மிரட்டல்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் , பாதிக்கப்பட்ட பெண்களை குற்றவாளிகள் மீண்டும் தொலைபேசியில் மிரட்டுவது , அவர்களை நேரில் சந்தித்து விரட்டுவது அவர்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வழக்குகள் மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களை வெளியில் வந்து மிரட்டுவது அச்சுறுத்துவது போன்ற புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..