மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கடந்த வியாழக் கிழமை 11 வயது சிறுமி, உறவினர் பெண்ணின் காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கொடூரத்தின் உச்சமாக சிறுமியின் அந்தரங்க உறுப்பு சிதைக்கபட்டுள்ளது. சிறுமி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
ஒரு மீன் பண்ணைக்கு அருகே கிராம மக்களால் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். சிறுமி கண்டுபிடிக்கப்பட்டபோது, அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிறுமியை பரிசோதித்தபோது, அவரை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், அவரது அந்தரங்க உறுப்பில் ஒரு குச்சியையும் சொருகியுள்ளனர் என்று மருத்துவர்கள் கூறினார்கள். கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் சிறுமிக்கு, ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது.
சோகமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, ஹவுராவின் டோம்ஜூர் மாவட்டத்தில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரின் காதலனை போலீசார் கைது செய்தனர். 22 வயதான அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாசிர்ஹாட்டில் உள்ள நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது காதலிக்கு புதிய செல்போனையும், பணத்தையும் தருவதாக கூறியுள்ளார். பின்னர், அந்தப் பெண் சிறுமியை தனது காதலனுடன் இரவில் விட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்