பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்டபுரத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரின் 19 வயது மகள் சுஷ்மிதா. இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை சிறுவாச்சூரை சேர்ந்த ரவியின் மகன் வினோத் (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வாகனம் ஆத்தூர் பெரம்பலூர் சாலையில் கோனேரிபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே கரும்பு கட்டுகளை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ட்ராக்டரின் பின்னால் வந்த சோமசுந்தரம் என்பவர் அந்த ட்ராக்டரை முந்தினார். இதனையடுத்து அந்த பைக், வினோத் ஓட்டி வந்த பைக்கின் மீது மோதியது. இந்த மோதலில் சுஷ்மிதா சாலையின் வலதுபுறமாக விழுந்து கரும்புக்கட்டு ஏற்றி வந்த ட்ராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வினோத்தும், சோமசுந்தமுரம் உட்பட 3 பேர் விபத்தில் படுகாயம் அடைந்தனர்.