உத்தரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வருபவர் அபிஷேக் என்ற ஜித்து. இவர் ஏற்கனவே கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. குற்றவழக்கு ஒன்றில் ஜித்து அலிகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அப்போது, குற்றவாளி ஒருவரை என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது, பாதுகாப்பிற்காக துப்பாக்கி வேண்டும் என்றும், அந்த துப்பாக்கியை தானே தயாரிக்க வேண்டும் என்றும் ஜித்துவிற்கு எண்ணம் உருவாகியுள்ளது.




சிறையில் இருந்து வெளியே வந்ததும் ஜித்து, கடந்த 6 மாதத்திற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் வாடகைக்கு ஒரு அறையை எடுத்துள்ளார். அந்த அறையிலே ஆயுதங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளார். அந்த அறைக்கு அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடையக்கூடாது என்பதற்காக தான் ஒரு வியாபாரி என்றும், பூட்டுகள் தயாரித்து அலிகாருக்கு விற்பனை செய்து வந்ததாகவும் நம்பவைத்துள்ளார்.


ஜித்து தான் தயாரித்த ஆயுதங்களை சிறையில் உள்ள ஒரு குற்றவாளியுடன் கூட்டணி வைத்து சட்டவிரோதமாக விற்கத் தொடங்கியுள்ளான். நாட்டு துப்பாக்கிகளே ஜித்துவால் சட்டவிரோதமாக அதிகளவில் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த துப்பாக்கிகளை உத்தரபிரதேசம் மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளார்.




நாட்டுத்துப்பாக்கிகளை சில ஆயிரங்களுக்கு விற்பனை செய்து வந்ததுடன் நாடு முழுவதும் சட்டவிரோதமாகவும் விற்பனை செய்து வந்த ஜித்துவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அப்போது, ஜித்து தனது பெயர் அபிஷேக் என்ற கப்பார் என்று விசாரணையில் கூறியுள்ளார். பின்னர், இவருக்கு ஜித்து என்ற மற்றொரு பெயர் இருப்பதும், சட்டவிரோத ஆயுத விற்பனைக்கு இந்த பெயரை பயன்படுத்தி வந்ததும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.  இதன்பின்னரே, ஜித்து சட்டவிரோதமாக ஆயுதம் தயாரித்து வந்த அறையை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் மூலப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க : மகனை மணமுடித்த திருநங்கையை, காரில் கடத்திச்சென்று அடித்துத் துன்புறுத்திய குடும்பம்.. நெல்லையில் கொடூரம்

மேலும் படிக்க : ராமநாதபுரம்: காதலனை கட்டிப்போட்டு கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. விசாரித்த காவலர்களுக்கு அரிவாள்வெட்டு

மேலும் படிக்க : அரியலூர் : கட்டாயப்படுத்தி வன்கொடுமை.. வீடியோவை காட்டி மிரட்டி திருமணம்.. நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண