கிருஷ்ணகிரி மாவட்டம் கேகே பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிக்குமார் (35) இவருக்கும் அங்கினாயனபள்ளியை சேர்ந்த பிரியா (28) என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்கள் பணி நிமித்தமாக கோயமுத்தூரில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்ததால் குழந்தையை சிசுக் கொலை செய்ய சொல்லி முனிக்குமார் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு காரணமாக காவல் நிலைத்தில் பிரியா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முனிகுமாரை வரவைத்துள்ளனர். அதன்பிறகு இருவரையும் காவலர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 6 வருடமாக இருவரும் சமாதானமாக இருந்து வந்த நிலையில். தற்போது பிறந்த இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தை என்பதால் அதே பிரச்சினையை தொடர்ந்து செய்துள்ளார். ஒரு காலகட்டத்தில் குழந்தையை கொலை செய்ய தானே முன்வந்து கத்தியை எடுத்து முனிகுமார் குழந்தையை குத்தியுள்ளார், எதிர்பாராத விதமாக தாய்பிரியா குழந்தையை தூக்கி  காப்பாற்றிய போது குழந்தையின் தொடையில் கத்திக்குத்து விழுந்துள்ளது. 



அதனை தொடர்ந்து  இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்து உள்ளது என்றும் அதை கொலை செய்துவிட வேண்டும் என்று  தகராறு செய்து விட்டு தன் சொந்த ஊரான கிருஷ்ணகிரி சென்றுவிட்டார். இவரது மனைவி பிரியா கணவன் திரும்பி வருவார் என்று பல நாட்களாக காத்திருந்து எந்த பயனும் இல்லாமல், முனிகுமாரை தேடி கிருஷ்ணகிரியில் உள்ள தனது கணவன் வீட்டுக்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து  அங்கு இருந்த கணவரின் சகோதரன் முனிரத்தினம் பெண் குழந்தை நம்முடைய குடும்பத்திற்கு ஆகாது என்றும் அதை கொன்றுவிட வேண்டும் என்று அவரும் வற்புறுத்தியுள்ளார். குழந்தைக்கு குடிக்க  வைத்திருந்த புட்டி பாலில் விஷம் வைத்து கொன்று விடலாம் என்று கணவரின் தம்பி முனிரத்தனம் கூறியுள்ளார். இதனால் தாய்  பிரியாவுக்கும் கணவருடைய தம்பி முனிரத்தினம் ஆகிய இருவருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



பின்னர் பிரியாவை தேடி வந்த அவர்களது  தம்பிகளுக்கும்  முனிகுமார் மற்றும் முனிரத்தினம் ஆகிய இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாததில்  ஆத்திரமடைந்த முனிரத்தினம் பிரியாவின் தம்பிகளான யோகானந்த் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் அருகில் இருந்த உருட்டு கட்டையினாலும்,  கம்பியினாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தடுக்க சென்ற பிரியாவையும், முனிக்குமார்  அவருடைய தம்பியும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த மூவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 


தருமபுரி: அரூர் அருகே பைக் ஸ்டாண்டில் அனாதையாக விடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு...!