செப்.17, 2021 இந்தியப் பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாள். இன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மோடியின் பிறந்தநாளை `சேவை மற்றும் சமர்ப்பண தினமாக'க் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள் பாஜக தொண்டர்கள். அதுமட்டுமின்றி, மோடி தனது அரசியல் பொது வாழ்வில் தலைமைப் பதவியில் அடியெடுத்துவைத்து இந்த ஆண்டோடு (அக்டோபர் 2021) இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதாவது, குஜராத் முதல்வராக 13 ஆண்டுகளும், இந்தியப் பிரதமராக ஏழு ஆண்டுகளும் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து இருந்துவந்திருக்கிறார் மோடி. இதையும் கொண்டாடும்விதமாக, இன்று முதல் தொடர்ந்து 20 நாள்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். இந்த நிகழ்ச்சிகளை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த பாஜக தேசியத் தலைவர் நட்டா அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி கூறும்போது, ‘‘கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கான சேவை செய்து, மக்களில் ஒருவனாக வாழ்ந்து வந்தேன். ஆனால், கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இதே நாளில் எனக்கு புதிய பொறுப்பு கிடைத்தது. குஜராத்தின் முதல்வராக பதவியேற்றேன். அப்போது, முதல்வர் பதவியில் இருந்து நாட்டின் பிரதமராவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை’’ என்றார்.
பொது வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர்மோடிக்கு பாஜக தலைவர்கள்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறும்போது, ‘‘நாட்டை வலிமையானதாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அவர்அமல்படுத்திய விதம் தனித்துவமானது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டசிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக்தடை சட்டம், ராமர் கோயில், சிஏஏதிருத்த சட்டம், ஓபிசி.க்கு அரசியலமைப்பு அந்தஸ்து, ஜிஎஸ்டி அமலாக்கம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு போன்று கடந்த 70 ஆண்டுகளாக நிலவி வந்த பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிரதமர் மோடி தீர்வு கண்டுள்ளார். தீவிரவாத ஒழிப்பு போன்ற பிரச்சினைகளில் உலக அரங்கில் இந்தியாவை மையமான இடத்துக்கு கொண்டு சென்றவர் மோடி’’ என்று புகழாரம் சூட்டினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறும்போது, ‘‘நாட்டில் சிறந்த நிர்வாகம், வளர்ச்சியை தொடங்கி வைத்தவர் பிரதமர் மோடி. நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காவும் இரவு பகலாக உழைத்து வருபவர் பிரதமர் மோடி’’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கியச் செய்திகள்...