அழகு சாதனா பொருள்கள் பயன்படுத்தினால் மட்டுமே சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று இல்லை.எந்த விதமான அழகு சாதனா பொருள்களும் இல்லாமல் இயற்கையான உணவை எடுத்து கொண்டாலும், ஆரோக்கியமாகவும், ஜொலிப்பாகவும் இருக்க முடியும்.
உணவின் முக்கியத்துவம் - பிரபலங்களின் பலரின் அழகுக்கு முக்கிய காரணம் அவர்கள் எடுத்து கொள்ளும் ஆரோக்கியமான உணவு முக்கிய காரணம். என்னதான் விலையுயர்ந்த அழகு சாதன பொருள்கள் பயன்படுத்தினாலும், உணவு ஆரோக்கியமாக அனைத்து ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு எடுத்து கொள்ள வேண்டும். அப்போது தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் - எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், எண்ணையில் பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சர்க்கரை போன்ற உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது முகப்பரு, முகத்தில் பொலிவின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
என்ன உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
சியா விதைகள் - சியா விதைகள் ஒமேகா 3 அமிலங்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. அதனால் இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. மேலும் இயற்கையான இந்த சியா விதைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
ஸ்ட்ராபெரி அல்லது ப்ளூபெர்ரி - இந்த பழங்கள், உடலில் இருக்கும் கழிவுகள் நீக்குவதற்கு பயன்படுகிறது. இந்த பழங்கள் வைட்டமின் சத்துகளை கொண்டுள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும். மேலும் சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும்.
பாதாம் பருப்பு - தினம் 4-5 பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து காலை எடுத்து கொள்வதால், சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் வராமல் பாதுகாக்கும். இதில் வைட்டமின் ஏ சத்துகள் நிறைந்து இருக்கிறது. இது முகத்தில் படியும் தேவையற்ற கருவளையங்கள் வராமல் பாதுகாக்கும்.
மீன்கள் - அடிக்கடி உணவில் மீன் சேர்த்து கொள்ள வேண்டும். அன்றாட உணவில் மீன் சேர்த்து கொள்வதால், இது உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஒமேகா 3 அமிலங்கள் மற்றம் விட்டமின் ஏ நிறைந்து இருப்பதால் இது சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சால்மன், மத்தி போன்ற கடல் மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்
கீரை வகைகள் - அனைவரும் சைவ உணவு எடுத்து கொள்ளும் அனைத்து நாட்களிலும் கட்டாயம் கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். சைவ உணவு பிரியர்கள் தினம் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து எடுத்து கொள்ளலாம். இதில் அனைத்து தனிமங்களும், விட்டமின்களும் நிறைந்து இருக்கிறது. சருமம் சோர்வாக இல்லாமல் புத்துணர்வுடன் இருப்பதற்கு கீரை
முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோக்கோலி, செலெரி போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.