கேரளாவைச் சேர்ந்தவர் அர்ஜூன். 23 வயதான இவர், சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது ராமாபுரம், பெரிய தெருவில் வசித்து வந்தார். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ராயலா நகர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், அர்ஜூனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர், அர்ஜூன் தங்கியிருந்த அறையில் சோதனை செய்தனர். அப்போது, அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில் அர்ஜூன் எழுதியிருப்பதாவது, “ எனக்கு வாழ பிடிக்கல. எல்லோரும் இருந்தும் நான் தனியாகத்தான் இருக்கிறேன். அதனால் நான் சாகப்போகிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய கடைசி ஆசை. என்னுடயை உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அப்படியே எனது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.” இவ்வாறு அவர் எழுதியிருந்தார். இந்த கடிதத்தையும் கைப்பற்றிய போலீசார் அவரது தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட அர்ஜூன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அர்ஜூன் தற்கொலை செய்து கொண்ட தினத்தன்று இரவு அந்த பெண் அர்ஜூனைப் பார்ப்பதற்கு வந்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது. அதே சமயம், அர்ஜூனின் வாய்க்குள் சிறிய அளவிலான புண் இருந்துள்ளது. இதனால், அது புற்றுநோயா? இருக்குமோ என்ற அச்சம் அவருக்கு இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரியான வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்த அர்ஜூனின் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? அல்லது உடல்நலப் பிரச்சினையா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து வந்து சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்