சென்னை, ஆவடி அடுத்து அமைந்துள்ளது பட்டாபிராம் டிரைவர்ஸ் காலனி. அந்த பகுதியில் உள்ள 4-வது தெருவைச் சேர்ந்தவர் அகிலன். 33 வயதான அவர் சென்னை, கிண்டியில் உள்ள குடிநீர் வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரோனிஷா. 22 வயதே ஆன இவர் சென்னை, அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம். 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்.
அகிலனும், ரோனிஷாவும் உறவினர்கள் என்பதால் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ரோனிஷாவின் கணவர் அகிலனின் தந்தை வணிகவரி அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாயார் மீனா சென்னை எழிலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை ரோனிஷாவின் மாமனார் குணசீலன் அரக்கோணம் சென்றுள்ளார். கணவர் அகிலனும், மாமியார் மீனாவும் வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் தனியாக இருந்த ரோனிஷா திடீரென வீட்டின் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து, தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரோனிஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதைனைக்கு அனுப்பினர். மேலும், கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருமணமான 3 மாதங்களிலே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திருவள்ளூர் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகிய 3 மாதத்திலே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு கணவன் மனைவி இடையே ஏதேனும் பிரச்சினையா? கணவன் வீட்டில் ஏதேனும் தகராறா? வரதட்சணை கொடுமையா? அல்லது கல்லூரியில் ஏதேனும் சிக்கலா? என்று பல கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்