கேரளாவில் மருத்துவ மாணவியை சுட்டுக்கொன்ற நபர், தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கண்ணூரை பூர்வீகமாகக் கொண்டவர் மானசா. பல் மருத்துவம் படித்து முடித்துள்ள இவர், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலத்தில் உள்ள உள்ள இந்திரா காந்தி பல் மருத்துவக் கழகத்தில்   பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ரஹில் என்ற நபர் மானசா தங்கியிருந்த விடுதியில் புகுந்து அவரை சுட்டுக்கொன்றார். பின்னர், தன்னையும் சுட்டுக்கொண்டார். அவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


இதுகுறித்து கொத்தமங்கலம் காவல்துறையினர் கூறுகையில், நேற்று மாலை 3.30 மணி முதல் மாலை 4 மணி வரை, மானசா தங்கியிருந்த வாடகை வீட்டிற்குள் ரஹில் புகுந்துள்ளார். வீட்டின் ஒரு அறைக்குள் இருவரும் இறந்து கிடந்தனர். ரஹில் மானசாவுடன் படித்தவர் அல்ல. அவர் ஏன் அங்கு இருந்தார் என்ற விவரங்களை நாங்கள் இன்னும் சேகரித்து வருகிறோம்” என்று போலீசார் தெரிவித்தனர். 


தொடக்கத்தில் போலீசாருக்கு இவர்கள் ஒருவருக்குகொருவர் நன்கு அறிந்தவர்கள் தெரியாது என்றாலும், பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர் என்பது தெரியவந்தது. ராகுலின் நண்பர் ஒருவர் ஊடகங்களிடம் கூறியதாவது, மானசா ரஹிலுடன் உறவை தொடர ஆர்வம் காட்டவில்லை, இது ரஹிலுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில், மானசாவின் குடும்பத்தினர் ராகிலுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.




“ரஹில் வந்தபோது, தோழிகளுடன் மானசா மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து மனாசா கலங்கிப்போய், ரஹிலிடம்  ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டார். மற்ற மாணவர்கள் வீட்டு உரிமையாளரை அழைப்பதற்காக கீழே சென்றபோது, ​​மேலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. எங்களில் சிலர் மற்ற மாணவர்களின் உரத்த அலறலைக் கேட்டு விரைந்து வந்தனர். அப்போது இருவரும் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் கண்டோம். நாங்கள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர்கள் உயிரிழந்தனர் ” என்று அந்த பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர் ஒருவர் மாத்ருபூமி செய்திக்கு கூறினார். மேலும், ரஹில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் வசித்து வந்ததாகவும் அவர்  குற்றம் சாட்டினார். ரஹில் துப்பாக்கியை எப்படி வாங்கினார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


இதற்கிடையில், பல் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி பிஜேஷ் ஐஏஎன்எஸ்ஸிடம் கூறுகையில், மானசாவுக்கும் ரஹிலுக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்ததாகவும், கடந்த காலங்களில் கண்ணூரில் அவரை போலீசார் எச்சரித்ததாகவும் கூறினார்.


மேலும், “அவர்களுக்கிடையில் என்ன பிரச்சினை இருந்தது என்பது பற்றிய விவரங்கள் எங்களுக்குத் தெரியாது. மாலை 3.45 மணியளவில் இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது. மானசா எங்கள் பல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் மற்ற மூன்று நண்பர்களுடன் தங்கியிருந்தாள். இந்த இளைஞன் மானசா தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்து அறையைப் பூட்டினான். சத்தங்கள் கேட்ட பிறகுதான் உள்ளூர்வாசிகள் வந்து என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடித்தனர்" என்றார்.


விரட்டி விரட்டி மகளை காதலித்த காதலன்... புரட்டி புரட்டி வெட்டிய பெற்றோர்!