ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த வட மாநில தொழிலாளியை தட்டி கேட்ட டிக்கெட் பரிசோதகர் எர்ணாகுளம் பகுதியை சார்ந்த  ஶ்ரீ வினோத் என்பவர் ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் இருந்து பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவரை தட்டிக் கேட்ட டிக்கெட் பரிசோதகர் ஸ்ரீ வினோத் என்பவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


Watch Video : கோவையில் வள்ளி கும்மி ஆடிய அண்ணாமலை.. கைதட்டி உற்சாகப்படுத்திய வானதி சீனிவாசன்




நேற்று மாலை எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்த எர்ணாகுளம் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில், எஸ் 11  கோச்-ல் டிக்கெட் பரிசோதனை செய்து வந்தார். மலையாளத் திரைப்பட துணை நடிகரும் டிக்கெட் பரிசோதகருமான வினோத் அப்போது அதேப் பெட்டியில் கஞ்சன் மாவட்டத்தைச் சார்ந்த ரஞ்சனி காந்தா என்பவர் பயணம் செய்து வந்த நிலையில் அவரிடம் முறையான டிக்கெட் இல்லாததை அடுத்து அவரை அடுத்த நிறுத்தத்தில் இறங்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த ரஞ்சனிகாந்தா டிக்கெட் பரிசோதகரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அடுத்து திருச்சூர் ரயில்வே போலீசார் கொலையாளியை கைது செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர். 


Manikandan: அதிர்ஷ்டம் எப்படி வேலை செய்யும் தெரியுமா? : மணிகண்டன் சொல்வதை கேளுங்க!




IPL 2024 Points Table: ரன் மழை பொழியும் விராட் கோலி.. பந்துவீச்சில் வித்தைக்காட்டும் மயங்க் யாதவ்.. புள்ளிப்பட்டியலில் யார் முதலிடம்?


தமிழகம், கேரளா மாநிலங்களில் பல்வேறு ரயில்களில் வடமாநிலத்தவர்கள் முறையான டிக்கெட்கள் இன்றி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வதும், இதனால் அவ்வப்போது தகராறு நிகழ்வதும் நடந்து வரும் நிலையில் டிக்கெட் பரிசோதகர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் கேரள மாநிலத்தை உலுக்கி உள்ளது.