இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 புள்ளிகள் அட்டவணையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மூன்று தொடர்ச்சியான வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மூன்று ஐபிஎல் போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நேற்றைய ஐபிஎல் 2024 போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை வீழ்த்தி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. ஐபிஎல் 2024ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து தோல்வியை சந்திந்து வருவதால் புள்ளிகள் அட்டவணையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு பிறகு குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி), சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் (டிசி), பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், மூன்று ஆட்டங்களில் மூன்று தோல்விகளுடன், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 புள்ளிகள் அட்டவணையில் 10வது மற்றும் கடைசி இடத்தில் உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) ஐபிஎல் போட்டிக்குப் பிறகு IPL 2024 அப்டேட் செய்யப்பட்ட புள்ளிகள் அட்டவணையை கீழே பார்க்கவும்

தரவரிசை அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி என்.ஆர்.ஆர் புள்ளிகள்
1 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3 3 0 +1.249 6
2 கொல்கத்தா நைட் ரைட்ரஸ் 2 2 0 +1.047 4
3 சென்னை சூப்பர் கிங்ஸ் 3 2 1 +0.976 4
4 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 2 1 +0.483 4
5 குஜராத் டைட்டன்ஸ் 3 2 1 -0.738 4
6 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 1 2 +0.204 2
7 டெல்லி கேப்பிடல்ஸ் 3 1 2 -0.016 2
8 பஞ்சாப் கிங்ஸ் 3 1 2 -0.337 2
9 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 1 3 -0.876 2
10 மும்பை இந்தியன்ஸ் 3 0 3 -1.423 0

ஆரஞ்சு கேப்: 

ஐபிஎல் 2024லில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு கேப் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 203 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

1. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) - 4 போட்டிகள் (203 ரன்கள்)

2. ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 3 போட்டிகள் (181 ரன்கள்)

3. ஹென்ரிச் கிளாசென் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 3 போட்டிகள் (167 ரன்கள்) 

4. நிக்கோலஸ் பூரன் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 3 போட்டிகள் (146 ரன்கள்)

5. குயின்டன் டி காக் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 3 போட்டிகள் (139 ரன்கள்)

பர்பிள் கேப்: 

ஐபிஎல் 2024லில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்களுக்கான பர்பிள் கேப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் 7 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

1. முஸ்தாபிசுர் ரஹ்மான் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 3 போட்டிகள் (7 விக்கெட்டுகள்) 

2. மயங்க் யாதவ் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 2 போட்டிகள் (6 விக்கெட்டுகள்)

3. மோஹித் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்) - 3 போட்டிகள் (6 விக்கெட்டுகள்)

4. யுஸ்வேந்திர சாஹல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 3 போட்டிகள் (6 விக்கெட்டுகள்)

5. ஹர்ஷித் ராணா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - 2 போட்டிகள் (5 விக்கெட்டுகள்)