கேரள வயநாட்டில் இரண்டு சிறுமிகள் தங்கள் தாயை கற்பழிக்க முயன்றதாகக் கூறி 70 வயது உறவினரைக் கொன்று அவரது உடலை அருகிலுள்ள கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர். உயிரிழந்த நபர் சிறுமிகளின் தந்தைவழி அத்தையின் கணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த உடனேயே 15 மற்றும் 16 வயது சிறுமிகள் தங்கள் தாயுடன் அம்பலவயல் போலீசில் சரணடைந்தனர். இரண்டு சிறுமிகள் தங்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 70 வயது உறவுக்கார முதியவர் திடீரென தங்கள் தாயை பலாத்காரம் செய்ய முயற்சிப்பதை பார்த்தனர்.
சிறுமிகள் அவரைத் தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் சிறுமிகளை தள்ளிவிட்டு தாயை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமிகள் அந்த நபரை வெட்டிக் கொலை செய்தனர். பின்னர், இரண்டு சிறுமிகளும் தங்கள் தாயுடன் சேர்ந்து அந்த முதியவரை தூக்கிச்சென்று அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர்.
இதுகுறித்து அந்த நபரின் இரு மனைவிகள் மற்றும் குழந்தைகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த சிறுமிகள் மீது கொலைக் குற்றத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் “காலை 11 மணியளவில் வீட்டில் தனது தாயை பலாத்காரம் செய்ய முயன்றதைக் கண்ட சிறுமிகள் 70 வயது நபரை வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது. சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த கொலை செய்யப்பட்ட நபருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
இதனிடையே கடந்த 2004ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி எடப்பள்ளியில் 74 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் போலீசார் ஜெயானந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாநிலத்தையே உலுக்கிய இரட்டை கொலை இதன் பின்னணியில் இருப்பதும் தெரியவந்தது. 74 வயது மூதாட்டியையும் 17 வயது சிறுமியையும் ஜெயானந்தன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: TN Gold Loan Waiver: யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? பட்டியல் இதோ!
‛இவ்வுலகை காப்பவளுக்கு இன்சூரன்ஸா?’ எக்ஸ்ப்ரி ஆன காரில் லக்ஸரி பயணம் செய்து வரும் அன்னபூரணி அம்மா!