தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது உலகம்  முழுக்க பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவைப்  பொறுத்தவரை டெல்லியில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கும், மகாராஷ்டிராவில் 160க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் தொற்றானது உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 45 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில்,  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்  பேடி ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “ கொரோனா தொற்றின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் அதிகரித்துவருகிறது. ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கையை மனதில் கொண்டு மூன்று இடங்களில் 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.




தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் 300 தற்காலிக படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. அதேபோல், மஞ்சம்பாக்கத்தில் 100 படுக்கைகளும்,  ஈஞ்சம்பாக்கத்தில் 100 படுக்கைகளும் தயார் நிலையில் இருக்கின்றன.  சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கொரோனா இரண்டாவது அலையின்போது எந்த அளவிற்கு மக்களுக்கு உதவியதோ அதேபோல் இந்த முறையும் இருக்கிறது.


கொரோனா இரண்டாவது அலையின்போது ட்ரேட் சென்ட்டரில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்ட 800 படுக்கைளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முதலமைச்சர் மாநகராட்சி ஆணையரிடம் கூறியதையடுத்து அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 4 அல்லது 5 நாள்களில் அது பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.




15 வயதிலிருந்து 18 வயத்துக்குள்வரை இருப்பவர்களில் 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியிருக்கிறது. ஜனவரி மூன்றாம் தேதி போரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் முதலமைச்சர் அந்தத் தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைக்கவிருக்கிறார்.


17ஆவது மெகா தடுப்பூசி முகாம் புத்தாண்டு காரணமாக சனிக்கிழமைக்கு பதிலாக வரும் ஞாயிற்றுக்கிழை நடைபெறும். எஸ்.ஜீன் ட்ராப் 129 பேருக்கு உறுதியாகியுள்ளது. அவர்களது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: TN Gold Loan Waiver: நகைக்கடன் தள்ளுபடி புதிய அப்டேட்: 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாதாம்! முழு விபரம் இதோ!


‛இவ்வுலகை காப்பவளுக்கு இன்சூரன்ஸா?’ எக்ஸ்ப்ரி ஆன காரில் லக்ஸரி பயணம் செய்து வரும் அன்னபூரணி அம்மா!