கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் சாஸ்தாமங்கலத்தில் திருட்டு குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மருதம்குழியைச் சேர்ந்த ஒருவரை அழகு நிலைய உரிமையாளர் நீனா, தனது பார்லரில் இருந்து வளையலைத் திருடிச் சென்றதாகக் கூறி அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நீனா மீது அருங்காட்சியகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை பார்லர் முன்பாக நடந்துள்ளது. தாக்கப்பட்ட பெண்ணுடன் அவரது மகள் இருந்துள்ளார். தாக்குதலின் காட்சிகள் வழக்கில் ஆதாரமாக மாறியுள்ளது. தாக்கப்பட்ட பெண்ணுடன் வந்த நபர் ஒருவர் இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அவரை ஒருவர் மிரட்டுவதும் பதிவாகியுள்ளது. அழகு நிலைய உரிமையாளர் அந்த பெண்ணின் துப்பட்டாவையும் பறித்துச் சென்றது வீடியோவில் தெரிந்தது.
பார்லர் உரிமையாளர் தன்னைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டி, இரக்கமின்றி தாக்கியதாக அந்தப் பெண் கூறினார். இதற்கிடையில், அந்த பெண் தனது அழகு நிலையத்திற்கு வந்து கால் செய்ய மொபைல் போன் கேட்டபோது மோதல் வெடித்ததாக நீனா கூறினார். நான் போனை தர மறுத்ததால், என் மீது அவதூறுகளை கூற தொடங்கினார் என்றும் கூறினார். மேலும், அந்த பெண் தனது பார்லரில் இருந்த வளையலை திருடியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: Crime: 3ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை..! 65 வயதான சித்த மருத்துவர் கைது..!
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பார்லர் உரிமையாளர் பெண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்