Crime: 3ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை..! 65 வயதான சித்த மருத்துவர் கைது..!

கொடுங்கையூரில் 3ம் வகுப்பு சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய 65 வயதான சித்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Continues below advertisement

சென்னை அருகே கொடுங்கையூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். 65 வயதான இவர் சித்த மருத்துவர். இவர் கொடுங்கையூரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், நகரில் சித்தா கிளினிக் நடத்தி வருகிறார். அதே பகுதியில் 3ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்கு பெற்றோர்களுடன் சென்றுள்ளார்.

Continues below advertisement


இந்த நிலையில், சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. திடீரென சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்ததில் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனே அருகில் இருந்த எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் பாலசுப்பிரமணியம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


பின்னர், மருத்துவர் பாலசுப்பிரமணியத்தை போலீசார் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பேத்தி வயது சிறுமியை சித்த மருத்துவரே பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில காலங்களாகவே சிறுமி, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகளவில் நடைபெற்று வருவது சமூக ஆர்வலர்கள் இடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு தொடுதல் தொடர்பான விஷயங்களை பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

மேலும் படிக்க : Chennai Crime: ஆன்லைனில் வாங்கிய ரம்பம்! வலிக்காமலிருக்க மயக்க மருந்து! பல்லாவரம் கொலையில் திடுக் தகவல்கள்!

மேலும் படிக்க: இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்த கும்பல்.. விசாரணையில் தீவிரம் காட்டும் காவல்துறை

மேலும் படிக்க : Crime : ட்ரில்லிங் மெஷினில் குழந்தைகளையும், மனைவியையும் அறுத்த கொன்ற நபர், தானும் தற்கொலை.. பொழிச்சலூரில் பயங்கரம்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola