கருவுற்ற பெண்களுக்கு தற்காலிகமாக பணியாற்ற தடை என்ற விதிகளை எஸ்.பி.ஐ திரும்பப் பெற்றுள்ளது.






கடந்த 31 டிசம்பர் 2022ல் ஸ்டேட் பாங்கின் புதிய விதிமுறைகள் வெளியானதாக மீடியாவில் சில தகவல்கள் வெளியானது. புதிய விதிமுறைகளின்படி கருவுற்ற தாய்மார்களில் 3 மாதத்தைக் கடந்தவர்கள் பணிகளில் இருப்பதை தடுக்கும் வகையில் ’அவர்கள் தற்காலிகமாக பணிசெய்யத் தகுதியற்றவர்கள்’ என நிர்வாகம் அறிவிப்பதாகத் தகவல்கள் வெளியானது.






வங்கியின் சுற்றறிக்கையின்படி,”கருவுற்றிருக்கும் சம்பந்தப்பட்ட பெண் குழந்தை பிறந்த நான்கு மாதத்துக்குப் பிறகே பணியில் சேரலாம்.அதுவரை அவர்கள் பணியில் இருக்கத் தகுதியற்றவர்கள்” என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த உத்தரவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதில், பாலின சமன்பாட்டிற்கு எதிரானது என்றும், அரசியல் சாசன அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல் என்றும் கண்டனம் எழுந்தது. 


ஊடகங்களில் வந்த இந்தத் தகவல்களை தன்னார்வமாகக் கையிலெடுத்த டெல்லி மகளிர் ஆணையம் வங்கியின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்றும் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றும் தெரிவித்தது. மேலும், சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020ன் படி அவர்களுக்கான சலுகைகளை இவை கிடைக்காமல் செய்யும் என்றும் டெல்லி மகளிர் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தில் வங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள டெல்லி மகளிர் ஆணையம் வருகின்ற 1 பிப்ரவரி 2022க்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. 


இதையடுத்து, கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனம் இல்லை என்ற உத்தரவை எஸ்.பி.ஐ வங்கி ரத்து செய்தது. அதேபோல், 3 மாதங்களுக்கு மேல் கருவுற்ற பெண்கள் பணியாற்ற தற்காலிகமாக  தடை விதிக்கப்பட்டிருந்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண