பெங்களூருவில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்ட ஒருவரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளதாக போலீசார் திங்கள் அன்று தெரிவித்தனர்.


மஞ்சுநாத் என அடையாளம் காணப்பட்ட அவர் 34 வயதானவர். மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் நகருக்கு அருகிலுள்ள கெஜ்ஜலகெரே கிராமத்தில் வசிப்பவர். உடலுறவில் ஈடுபட்டபோது அவரை கையும் களவுமாக பிடித்த அவரது நண்பர் அளித்த புகாரின் பேரில் சந்திரா லேஅவுட் பகுதி போலீசார் கைது செய்தனர்.


காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மாடுகளுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளார். அதற்காக அவர் தனது கிராமத்திலிருந்து பெங்களூரு பல்கலைக்கழக ஞானபாரதி வளாகத்திற்கு அடிக்கடிச் செல்வார் எனக் கூறப்படுகிறது.


வளாகத்தின் வயல்களில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை தனிமையான இடங்களுக்கும், புதர்களுக்கும் அழைத்துச் சென்று குற்றத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். அவருடைய இந்த மனநிலையின் காரணமாக, மஞ்சுநாத்தின் குடும்பம் அவரை நிராகரித்துள்ளது. மேலும் வேலை எதும் இல்லாத நிலையில் பெங்களூரு வந்து தனது நண்பரின் வீட்டில் தங்கியுள்ளார்.


வீட்டில் மாடுகளை வளர்த்து வந்த நண்பர் சசிகுமாருடன் தங்கியிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் மாடுகளின் வாலை வெட்டி, இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டுள்ளார். சந்தேகமடைந்த சசிகுமார், அவரது நடமாட்டத்தை பார்த்து கையும் களவுமாக பிடித்துள்ளார்.


பின்னர், குற்றவாளி காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.






இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஏப்ரலில்தான் லக்னவ்வை சேர்ந்த நபர் ஒருவர் மாட்டுடன் இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொண்டதாகக் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.