கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவி மினரல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் ஆண்டேஸ்வரன் என்பவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் லாக்கரில் வைத்திருந்த 85 சவரன் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்றனர்.


வீட்டின் பின்பக்க கதவு உடைப்பு:


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஆண்டேஸ்வரன். இவர் விவி மினரல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிடெக் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆண்டேஸ்வரன் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள மகனை பார்க்க சென்றுள்ளார். நேற்று மாலை அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக ஆண்டேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தார்.


85 சவரன் கொள்ளை:


 திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் நிகழ்விடம் வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் லாக்கரில் வைத்திருந்த 85 சவரன் தங்க நகையை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் சிசிடிவி கேமரா இருந்த போதும் காட்சிகள் பதிவாகும் டிவிஆர் கருவியையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர். கொள்ளை குறித்து ஆண்டேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை போன வீட்டில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்த நிலையில் கொள்ளை தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க: PIB Fact Check: `ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஃபாஸ்டாக் திருட்டு உண்மையா? - விளக்கம் அளித்த மத்திய அரசு





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண